Friday, November 3, 2017

நீங்கள் எத்தனையோ பேர்களை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் '

நீங்கள் எத்தனையோ பேர்களை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் அவர்களிடத்தில் உர்க்காரும்போதோ பேசும்போதோ அல்லது அவர்களிடத்தில் உங்களுக்கு ஏதோவொரு தேவை நிறைவேற வேண்டும் என்று நினைத்து​, ஆனால் அந்த காரியம் முடியாமல், மேலும் நீங்கள் ஏதோவொரு களைப்பு உங்களிடம் ஏற்பட்டு இருப்பதை உணர்வீர்கள். இப்படியொரு அனுபவம் உங்களுக்கு உண்டா?. அது ஏனென்று தெரியுமா உங்களுக்கு?.

சூஃபி ஞானிகளான இறைநேசர்களிடத்தில் இரண்டு விதமான சக்திகள் இருக்கிறது ஒன்று தாங்கும் சக்தி. மற்றொன்று பாயும் சக்தி
சூஃபி ஞானிகளான இறைநேசர்கள் தங்கள் தவத்தில் அதாவது திக்ரு (தியானம்) தில் இருக்கும்போது அவர்கள் உடல் அசையாமல் இருக்கும். உடல் அசையாமல் இருக்கும்போது அவர்களின் மனம் அசைவது நின்று விடும். மனம் அசைவது நின்று விடும்போது மனம் ஒரு நிலையில் குவியும். அப்படி மனம் ஒரு நிலையில் குவியும்போது இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய காந்த சக்தி ஆற்றல்கள் அவர்கள் திக்ரு தியானத்தின், மனதின் மூலமாக அவர்களின் உடலில் பாய்ந்து நாடி நரம்புகளில் நிரம்பி இருக்கும்.
இப்படி இருக்ககூடிவர்களை நீங்கள் சந்திக்கும் போது, அவர்களின் அருகில் அமரும்போது, பேசும்போதும், அவர்கள் இறந்த பிறகு அவர்களின் மறைவிடத்திற்கு சென்று அங்கு அருகில் அமர்ந்து இருக்கும்போது, அங்கே இருக்கக்கூடிய தண்ணீர் அல்லது உணவு பெற்று சாப்பிடும்போது ஏதோ ஒன்று உங்களை நிறைப்பியதை உங்களால் உணர முடியும், மன மகிழ்வு, நிறைவு , தீர்வுகள் கிடைக்கும் இதற்கு காரணம் அந்த சூஃபி ஞானிகளான இறைநேசர்களின் திக்ரு தவத்தினால் அடைந்து கொண்ட அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் ஆற்றல்கள் உங்கள் மீது பாய்வதுதான் காரணம்.
وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ‌ وَالَّذِىْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًا ‌ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ 
(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 7:58)
*மௌலவி
அஹமது மீரான் சாஹிப் ஆலிம்
உஸ்மானி
கலீபத்துல் காதிரி வஷத்தாரி.
மேலப்பாளையம்.*நீங்கள் எத்தனையோ பேர்களை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் அவர்களிடத்தில் உர்க்காரும்போதோ பேசும்போதோ அல்லது அவர்களிடத்தில் உங்களுக்கு ஏதோவொரு தேவை நிறைவேற வேண்டும் என்று நினைத்து​, ஆனால் அந்த காரியம் முடியாமல், மேலும் நீங்கள் ஏதோவொரு களைப்பு உங்களிடம் ஏற்பட்டு இருப்பதை உணர்வீர்கள். இப்படியொரு அனுபவம் உங்களுக்கு உண்டா?. அது ஏனென்று தெரியுமா உங்களுக்கு?.
சூஃபி ஞானிகளான இறைநேசர்களிடத்தில் இரண்டு விதமான சக்திகள் இருக்கிறது ஒன்று தாங்கும் சக்தி. மற்றொன்று பாயும் சக்தி
சூஃபி ஞானிகளான இறைநேசர்கள் தங்கள் தவத்தில் அதாவது திக்ரு (தியானம்) தில் இருக்கும்போது அவர்கள் உடல் அசையாமல் இருக்கும். உடல் அசையாமல் இருக்கும்போது அவர்களின் மனம் அசைவது நின்று விடும். மனம் அசைவது நின்று விடும்போது மனம் ஒரு நிலையில் குவியும். அப்படி மனம் ஒரு நிலையில் குவியும்போது இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய காந்த சக்தி ஆற்றல்கள் அவர்கள் திக்ரு தியானத்தின், மனதின் மூலமாக அவர்களின் உடலில் பாய்ந்து நாடி நரம்புகளில் நிரம்பி இருக்கும்.
இப்படி இருக்ககூடிவர்களை நீங்கள் சந்திக்கும் போது, அவர்களின் அருகில் அமரும்போது, பேசும்போதும், அவர்கள் இறந்த பிறகு அவர்களின் மறைவிடத்திற்கு சென்று அங்கு அருகில் அமர்ந்து இருக்கும்போது, அங்கே இருக்கக்கூடிய தண்ணீர் அல்லது உணவு பெற்று சாப்பிடும்போது ஏதோ ஒன்று உங்களை நிறைப்பியதை உங்களால் உணர முடியும், மன மகிழ்வு, நிறைவு , தீர்வுகள் கிடைக்கும் இதற்கு காரணம் அந்த சூஃபி ஞானிகளான இறைநேசர்களின் திக்ரு தவத்தினால் அடைந்து கொண்ட அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் ஆற்றல்கள் உங்கள் மீது பாய்வதுதான் காரணம்.
وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ‌ وَالَّذِىْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًا ‌ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ 
(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 7:58)
*மௌலவி
அஹமது மீரான் சாஹிப் ஆலிம்
உஸ்மானி
கலீபத்துல் காதிரி வஷத்தாரி.
மேலப்பாளையம்.*

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails