Wednesday, August 16, 2017

இன்னா செய்தாரை..


Noor Mohamed

அண்ணல் நபிகளாரின் ஆருயிர்நண்பர்,நபிகளாரின் மறைவுக்குப்பிறகு சமுதாயத்திற்குத் தலைமையேற்ற முதல் கலீபா அமீருல் முஃமினீன் அபூபக்கர் ஸுத்தீக்(ரலி) அவர்கள் இயல்பிலேயே இரக்கசிந்தையும் ஈகைக் குணமும் அமையப்பெற்ற அருமையான மனிதர்.நபித்தோழர்களில் ஒருவர் மிகவும் ஏழ்மையில் இருந்த நிலையில் அவருக்கு வழமையாக உதவிசெய்து வந்தார்கள் ஸித்தீகுல் அக்பர் அவர்கள்!

இன்னிலையில் அன்னாரின் அருமை மகளாரும் நபிகளாரின் மனைவியுமான உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா அவர்களைப்பற்றி அவதூறு கிளப்பியவர்கள் அப்பொய்ச்செய்தியை பரப்பிக்கொண்டிருந்தபோது,மேற்படி உதவிபெற்றுக் கொண்டிருந்த நபித்தோழரும் அதனை பரப்புவதில் பங்குபெற்றிருந்தார் என அபூபக்கர் ரலி அவர்கள் அறிந்து மனவேதனை அடைந்தனர்!இறை உதவியால் அவதூறுச் செய்தி முறியடிக்கப்பட்டபிறகு,அபூபக்கர் ரலி அவர்கள்
அந்த நபித் தோழருக்கு செய்துவந்த பொருளாதாருதவிகளை நிறுத்தியதுடன் மேற்கொண்டு எவ்வித உதவியும் செய்வதில்லை என முடிவெடுத்தனர்!
அப்போது அல்லாஹ் நபிக்கு வஹி மூலம் செய்தி அறிவித்து அவ்வாறு செய்வது நல்ல முஃமின்களுக்கு அழகல்ல என்று அறிவுறுத்தினான்!
இறைக்கட்டளைக்கு அப்படியே அடிபணிந்த அபூபக்கர் ரலி அவர்கள் அத்தோழரை மன்னித்து முன்பைவிட அதிகமாக உதவிகள் செய்யத்துவங்கினார்கள்!
"வஸ்பிற் அலாமா யகூலூன
வஹ்ஜுறுஹும் ஹஜ்ரன் ஜமீலா"
உம்மை வேதனைப் படுத்தும் அவர்களது வார்த்தைகளைப் பொறுத்துக்கொண்டு அவர்களை அழகிய வெறுப்பாக வெறுத்துவிடுவீராக.
-அல்குர்ஆன்.
ஹஜ்ரன் ஜமீலா =அழகான வெறுப்பு!
இன்னா செய்தார்க்கு நன்மை செய்தல்...!


Noor Mohamed

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails