Saturday, August 12, 2017

.இந்திய பிரிவினைக்கு யார் காரணம்? முஸ்லிம்களா? ஹிந்து தீவிரவாதிகளா? பகுதி 1

--கணியூர் இஸ்மாயீல் நாஜி
இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.
.
கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19ஆம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து – முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம்களும்
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர். அதற்கு இரு வழியினைக் கடைப்பிடித்தனர்.
1) இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்ப்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளைத் திரித்துக் கூறுதல்
2) பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும், பொறாமையையும், குரோதத்தையும் ஏற்ப்படுத்துதல்.
பிரீட்டிஷாரின் சதி
ஒரிசாவின் முன்னாள் ஆளுநரும், முந்நாள் ராஜ்யசபை உறுப்பினருமான பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படித் திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும் பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார் :
பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும். எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளர் “வுட்” எழுதியக் கடிதத்தில்,
“ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்திமூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம். இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,
“மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பெருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்ப்படுத்தித் தரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்” என எழுதியுள்ளார்.
கர்ஸான் பிரபுவுக்கு ஜார்ஜ் பிரான்ஸிஸ் ஹாமில்டன் பின்கண்டவாறு எழுதியுள்ளார் :
“படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துள்ள இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே இனத்துக்கு இனம் பிளவை அதிகப்படுத்துகிற வகையில் பாடப்புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்.”
இதன் அடிப்படையில் இந்திய சரித்திரப் பாடப் புத்தகங்கள் திட்டமிட்டுத் திரித்து எழுதப்பட்டன. மத்திய காலத்தில் முஸ்லிம் மன்னர் ஆட்சியில் இந்து மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர் என்பதுப் போன்ற கருத்துக்கள் வலிந்து திணிக்கப்பட்டன.
பொருளாதாரத் தாக்குதல் :
இரண்டவதாக, பொருளாதார ரீதியில் இருவரிடையே விரோதத்தை ஏற்ப்படுத்த முனைந்தனர். வங்காளத்தில் நிரந்தரக் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களிடம் ஊழியர்களாக இருந்த இந்துக்களிடம் தரப்பட்டன. டாக்டர். டபிள்யூ. டபிள்யூ .டபிள்யூ. ஹண்டர் பின்வறுமாறு எழுதுகிறார் :
“நிரந்தரக் குடியேற்றத்தின் இலட்சியமே இந்து அதிகாரிகளை நிலச்சுவான்தார்களாக மாற்றுவதே. அன்று வரை முக்கிய பதவிகளில் இல்லாமல் இருந்த வரி வசூலிப்பவர்களை இக்குடியேற்றம் உயர்த்தி விட்டது. முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியிருந்த செல்வங்களை எல்லாம் இந்த இந்து ஏவலாளர்கள் சேகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.”
(Quoted The Meaning of Pakistan By F,K. Khan Durrani)
நிதி நிர்வாக விஷயங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இரானுவத்தில் முஸ்லிம்கள் சேராமல் தடை செய்யப்பட்டனர். 
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த “டோர்பின் என்ற பத்திரிக்கை 1867ஆம் ஆண்டு ஜுலை 14 ஆம் தேதி இதழில் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அன்றைய முஸ்லிம்களின் அவல நிலையை வெளிப்படுத்தும்,
#“பெரியதும் சிறியதுமான எல்லா அலுவல்களும் நாளடைவில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு இதர மதத்தினரிடம் குறிப்பாக இந்துக்களுக்குக் கொடுக்கப்பட்டன
. ஆட்சியாளர் தனது குடிமக்களில் எல்லா வகுப்பாரையும் ஒரே விதமாக பாவிக்கக் கடமைப்பட்டுள்ளது. அவ்வாறிருக்க, முஸ்லிம்களை அரசாங்க பதவிகளிலிருந்து அகற்றி விடுவதற்கு தங்களின் கெஜட்டுக்களிலிருந்து முஸ்லிம்களை பகிரங்கமாக நீக்கி விட்டிருக்கிறது. சமீபத்தில் சுந்தர்பான்ஸ் காரியாலயத்தில் சில இடங்கள் காலியாகின. இதைப் பற்றி கமிஷ்னர், அரசாங்க கெஜட்டில் வெளியிட்ட விளம்பரத்தில் அவ்வேலைகள் இந்துக்களைத் தவிர வேறெவருக்கும் தரப்பட மாட்டாதென அறிவித்திருந்தார். முஸ்லிம்கள் அரசாங்க வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இருப்பினும் அரசாங்க அறிக்கையில் அவர்களைப் புறக்கிணித்தே வைத்திருந்தது. இவ்வளவு தாழ்ந்த நிலைமைக்குள் முஸ்லிம்கள் ஆக்கப்பட்டனர்.”
மேற்கண்டவாறு ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்ட சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும் முஸ்லிம்களை விட தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் மனோ பாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன
தொடரும
் இன்ஷாஅல்லாஹ்இந்திய பிரிவினைக்கு யார் காரணம்? முஸ்லிம்களா? ஹிந்து தீவிரவாதிகளா? பகுதி 1

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இலவசமாக தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட
கையேடு.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails