Monday, June 12, 2017

கேரளத்தில் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாக வசிக்கும் மாவட்டங்களில் மலப்புரமும் ஒன்று

கேரளத்தில் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாக வசிக்கும் மாவட்டங்களில் மலப்புரமும் ஒன்று
அங்கே உள்ள சின்னஞ்சிறு கிராமம் புன்னதாலா . பல மசூதிகளுக்கு மத்தியில் அங்கே சிறிய இந்து கோயில் ஒன்றும் இருக்கும்.. புன்னதலாவில் வசிக்கும் இந்து மக்களுக்கு, இதுதான் ஒரே வழிபாட்டுத்தலம். 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில், நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு
ஆனால் ஒரு கட்டத்தில் கோவில் கூரை இடிந்து சுவர்கள் விழுந்து தகர்ந்து போனது அந்தக்.கோவிலைசீரமைத்துக் கட்டவேண்டும் என்பது இந்து மக்களின் நீண்டநாள் ஆசையாகஇருந்தது
பல்வேறுவகையில் முயற்சித்தும் முடியாமல் போனதால், சீரமைப்புப் பணியை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டனர்

இதை அறிந்த புன்னதாலா இஸ்லாமிய மக்கள், அவர்களாகவே உதவி செய்ய முன்வந்தனர்
'கவலப்படாதீங்க கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்' எனக் கூறி பொதுவேண்டுகோள் ஒன்றை இஸ்லாமிய சமூகத்துக்கு முன்பு வைத்தார்கள்
அவர்களின் வேண்டுகோளை ஏற்று இஸ்லாமிய மக்கள் குடும்பம்.குடும்பமாக தங்களால் இயன்ற தொகையை அளித்தனர் வளைகுடாநாடுகளில் வேலை செய்யும் அவர்களின் உறவினர்களிடம் வேண்டுகோள் வைத்தார்கள் அவர்களும் பணம் அனுப்பிவைத்தார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், கோயிலைச் சீரமைக்க நிதியை இந்துக்களிடம் ஒப்படைத்தனர் ஆனந்தக்கண்ணீரோடு பெற்றுக்கொண்டனர் கிராம மக்கள்.
கோயில் முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டது.
நிதி திரட்டிக் கொடுத்ததோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக இஸ்லாமிய மக்கள் ஒதுங்கி விடவில்லை. கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர்.
நெகிழ்ந்து போன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்தச் சமயத்தில் தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவுசெய்து, அழைப்பு விடுத்தனர். அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 500 இஸ்லாமிய மக்களும் உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட சைவ உணவை இஸ்லாமிய மக்கள் ருசித்தனர்.
கோயில் செயலாளர் மோகனன்
, ''எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட, சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி 'மனிதம்' என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்'' என்றார்

அன்புடன் புகாரி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails