Sunday, May 14, 2017

பெயரும் பிறந்த நாளும்...

1958ஆம் ஆண்டின் மே மாத்த்தின் கடைசி் பகுதில் ஒருநாள்.கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்குச் சில நாட்களே இருந்தன.வாப்பா தனது குட்டியாப்பாவிடம்(எனக்கு சின்னவலியாப்பா) சொன்னார்.
குட்டியாப்பா! பள்ளிகொடம் தொறக்க நாளாயாச்சு.நான் கச்சவட காரியமா புனலூர் போவணும்.மோனெ பள்ளிகொடத்துல் ஒண்ணு சேத்து உட்டுரணும்.
ம்ம்...செரி.நாளைக்கி திங்களாச்சா தானே இன்ஷா அல்லா சேத்துரலாம்.நீ பரகத்தா பொய்ட்டு வா.

எனது வாப்புப்பா(வாப்பாவின் வாப்பா) சில மாதங்கள் முன்புதான் இறையடி சேர்ந்திருந்ததால் சின்ன வலியாப்பாதான் அப்போதைய குடும்பக் காரணவர்.
மறுநாள் காலையில் நிக்கரும் சட்டையும் அணிந்து புறப்பட்டேன்.சின்ன வலியாப்பா
சங்குமார்க் சாரமும் சந்தன கலர் ஜுப்பாவும் அணிந்து வெள்ளைவெளேர் மஸ்லீன் துணியில் தலையைச்சுற்றி கச்சிதமான தலைப்பாகை பின்பக்கம் கொசுவம் விட்டு கட்டியபடி புறப்பட்டார்.வெள்ளிப் பிடி வைத்த வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி என்னை ஒருகையில் பிடித்தபடி சாலையோரமாக நடக்கத் துவங்கினோம்.
பள்ளிக்கொடம் வந்துசேரும் வரை சாலையில் எதிர்ட்டவர்கள் எல்லோருமே
லெப்பை ,அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஸலாம் சொல்ல இவரும் பதிலுரைத்தபடியே நடக்க, எனக்கு ஒரே குஷி!அடடா, வலியாப்பாவுக்குத்தான் எவ்வளவு மதிப்பு என்பதில்....
ஸ்கூலும் வந்து சேர்ந்தோம்.ஹெட்மாஸ்டர் அறையில் அட்மிசன் நடந்து கொண்டிருக்க, அருகில் எங்களது நெருங்கிய உறவினர் ஆசிரியர் அருகில் இருந்து உதவிக்கொண்டிருந்தார்.இவரைக் கண்டதும் எழுந்து வந்தவர்
என்ன குட்டியாப்பா, இந்தப் பக்கம்...?
ஒண்ணுமில்ல செய்மகண்ணு, பேரப்புள்ளைய ஒண்ணாங்கிளாசில் சேக்கணும்...
யாரு மம்மத்திலுக்க மோனா இது?
(முகம்மது அப்துல் காதிர் என்பதின் பேச்சு வழக்கு).
ஓம்,அவனுக்கு வர நேரமில்லே அதான் நான் கூட்டீட்டு வந்தேன்.எனக்கெ அவசரமா நடுக்கட வரெ போவணும்.நீ ஒண்ணு செரியாக்கீரு.
செரி,குட்டியாப்பா பொய்ட்டு் வரட்டு நான் பாத்துகிடலாம்.இந்த பாரத்துல ஒரு ஒப்புமட்டும் போடட்டு் என்று ஒப்பு வாங்கினார்.
மோனே, நீ இந்த பெரியாப்பாகிட்ட நிண்ணுகோ, வலியாப்பா வந்து கூட்டீட்டு போவேன் என்றபடு அவரும் கிளம்பினார்.
இவரே எல்லாம் எழுதி முடித்து அட்மிசன் போட்டாயிற்று.அந்த மாத்திலிருந்து உத்தேசமாக ஐந்து வயது நிறைவான கணக்கே எனது பிறந்த நாளாக 14/5/1953
பதிவு செய்யப்பட்டது.
சில்நாள் கழிந்து பள்ளி திறந்து முதல் நாள் வகுப்பில் மாணவர்கள் பெயர்ப் பிரகாரம் இருக்கைகளில்(அதாவது தரையில்) அமர பெயர்கள் அழைத்தார்கள்.
தலையெல்லாம் வெள்ளிக்கம்பிகளாய் நரைத்து மின்ன, ஒருரூபாய் அகல பெரிய குங்கும்ப் பொட்டுமாய் இருந்த பாட்டு்டீச்சர்
பார்வதியம்மா அழைத்துக் கொண்டிருந்தார்.
அப்துல்ஹமீது
அப்துல்ரகுமான்
அகமதுப்பிள்ளை
அனந்தராமன்....
ஒவ்வொருவராக போய் அமர....
நூர்முகமது
...
யாரும் குரல் கொடுக்கவில்லை நான் உட்பட
எல்லா பெயர்களும் முடிய நான் மட்டும் தனியாக நின்றேன்.
டேய், உன் பேர் என்னடா?
நூருல்அமீன்....
(ஆம் அதுதான் நான் பிறந்தபோது எனக்கு சூடப்பட்ட திருநாமம் ..!)
இல்லியேடா இங்க நூர்முகம்மது ண்ணுதானே இருக்கு.
என்னையும் அழைத்துக் கொண்டு ஹெட்மாஸ்டர் அறைக்குச் சென்றார்.
விஷயம் சொல்ல,அங்கிருந்த பெரியாப்பா
(அட்மிசன் போட்டவர்) சொன்னார்
லே மோனே,ஒனக்க பேரு நூருலமீனா?
நான் ஒனக்க வாப்புப்பா பேரெதான் போட்டிருப்பாங்கொண்ணு நெனச்சி எழுதீட்டேன்.செரி செரி அதுக்கென்னா
வலியாப்பாக்க பேரெதானே எழுதியிருக்கு.
அப்புடுயே இரிக்கட்டு என்ன என்றபடி வகுப்புக்கு அனுப்பி வைத்தார்....!!?
அன்று அந்த திருவாங்கொடு தமிழ் பள்ளிகொடத்தில் எனது பிறந்த நாளும் பெயரும் நிச்சயிக்கப்பட,
உற்றாருக்கும் உறவாருக்கும் நூருல் அமீனாகவும் மற்றாருக்கு நூர் முகம்மதாகவும் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.
பிற்காலத்தில் மதரசா ஆலிமிடம் இந்தக் கதையை சொன்னபோது அவர்சொன்னார்
அதினெந்தா,சாரமில்லா
நூருல் அமீன் எந்நால் விசுவாசத்தின்டே பிரகாஷம் என்னும்
நூர்முகம்மது எந்நால் ரசூலின்டெ பிரகாஷமெந்நுமாணு அர்த்தம்.
அது கொண்டு நீ விஷமிக்கேண்ட மோனே..!!

Noor Mohamed

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails