Sunday, May 28, 2017

கடமைகள் ஐந்தில் ஒன்று

‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத்

இந்நூல் குறித்து.....

வரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது. உண்மை திரிபும் கூடாது. நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும். நடுநிலை பிரளா மணம் வேண்டும். இத்தகைய சீரிய வரையறையோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு என் அன்புச் சகோதரர் அபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூல் வெளிவந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்னார்வ தொண்டர்கள்

துபாய் ஈமான் அமைப்பு வழங்கி வரும் நோன்பு கஞ்சி விநியோகப் பணிகளுக்கு தன்னார்வ தொண்டர்கள் தேவை

துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் தமிழகத்து சுவை மிக்க நோன்புக் கஞ்சியை துபாய் தமிழ் பஜாரில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளி, பிரிஜ் முராரில் உள்ள லத்திபா பள்ளி மற்றும் ஈடிஏ அஸ்கான் பின்புறம் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றில் நோன்புக் கஞ்சி விநியோகிக்கும் பணியினை தன்னார்வ தொண்டர்கள் மூலம் ஒருங்கிணைத்து வருகிறது.
இந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்னார்வ தொண்டர்கள் ஈமான் அமைப்பினை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு : 050 51 96 433 / 050 658 9305

rom: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

Thursday, May 18, 2017

மறுமணம்:

இது பொதுவாக தமிழகத்தில் பரவலாக பேச்சு வழகத்தில்தான் இருக்கிறது. நடைமுறையில் பழகத்தில் வந்தால் நாட்டில் பல பிரச்சினைளுக்கு தீர்வுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நடைமுறை என்பது இளம் தம்பதியினர்களில் எதாவது குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்படும் பிரிவினையில் மணமகன் உடனே மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் நம் தமிழக பெண்கள் மறுமணம் செய்ய அவர்கள் மனது உகந்ததாக இல்லை. காரணம் குடும்ப நிலைகளை கருத்தில் கொண்டு வேண்டாம் யென கூறி பிறகு மனதால் துயரம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.

Sunday, May 14, 2017

பெயரும் பிறந்த நாளும்...

1958ஆம் ஆண்டின் மே மாத்த்தின் கடைசி் பகுதில் ஒருநாள்.கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்குச் சில நாட்களே இருந்தன.வாப்பா தனது குட்டியாப்பாவிடம்(எனக்கு சின்னவலியாப்பா) சொன்னார்.
குட்டியாப்பா! பள்ளிகொடம் தொறக்க நாளாயாச்சு.நான் கச்சவட காரியமா புனலூர் போவணும்.மோனெ பள்ளிகொடத்துல் ஒண்ணு சேத்து உட்டுரணும்.
ம்ம்...செரி.நாளைக்கி திங்களாச்சா தானே இன்ஷா அல்லா சேத்துரலாம்.நீ பரகத்தா பொய்ட்டு வா.

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்


Padmanabhamn Sivathanupillai
>>>அஸ்ஸலாமு அலைக்கும் பற்றித் தெரிய வில்லை, வணக்கமென்பது பணிவோடுகூடிய, பாசத்துடன்கூடிய, உடன்பாடு. இது மற்றெதுவோடும்
பொருந்துவதாகத் தெரியவில்லை<<<

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
சாந்தியும் சமாதானமும் உண்டாகுக
என்று பொருள்

அதாவது
அன்பும் அமைதியும்
மன உடன்பாடும் நிறைக
என்று பொருள்

நான் சவுதி அரேபியாவில்
வாழ்ந்திருந்த நாளில்
ஒரு வாடிக்கையாளர்
கடுங்கோபத்தில் வந்து
காட்டுக் கத்தாகக்
கத்தத் தொடங்கினார்

Tuesday, May 9, 2017

அறிவுக்குத்தான் எத்தனை அழகு ! / அபு ஹ்ஷீமா வாவர்

காஜா முஹைதீன் பாகவி
ஒருமுறை கலீபா உமர் ( ரலி ) அவர்கள் நண்பர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஹுதைபத்துல் யமான் என்ற நபித் தோழர் வந்தார். அவர் அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் அந்தரங்க காரியதரிசியாக இருந்தவர். கலீபாவின் மரியாதைக்கு உரியவர்.
அவரைக் கண்டதும் " வாருங்கள் ஹுதைபத்துல் யமான் அவர்களே ! எப்படி இருக்கிறீர்கள் ?" என்று உமர் ( ரலி ) அவர்கள் நலம் விசாரித்தார்கள்.
" நலமாக இருக்கிறேன் " என்ற ஒரே வார்த்தையில் பதிலை முடிக்காமல்......
" கலீபா அவர்களே...நான் பித்னாவை நேசிக்கிறேன்
ஹக்கை வெறுக்கிறேன்
ஒளுவில்லாமல் இபாதத் செய்கிறேன்
அல்லாஹ்விடம் இல்லாததை பெற்றிருக்கிறேன் "
என்று ஹுதைபத்துல் யமான் சொன்னார்.

Monday, May 8, 2017

கீறிக் கிழிக்கும் அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்லாம்


      முஹம்மத் பகீஹுத்தீன்    

மருத்துவ துறையில் முஸ்லிம்கள்

மருத்துவத் துறைக்குப் பங்காற்றிய அறிஞர்கள்

மருத்துவ துறையை ஊக்குவித்த இஸ்லாம்

மருத்துவத் துறையில் பெண்கள்

பெண்கள் ஆண்களுக்கு சிகிச்சையளித்தல்

சத்திர சிகிச்கைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

மருத்துவம் வெறும் உடம்புக்கு மாத்திரம் அல்ல

படைப்பினங்களில் மாற்றம் செய்தல்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

கீறிக் கிழிக்கும்  அறுவை சிகிச்சைக்கு  வித்திட்ட இஸ்லாம்

      முஹம்மத் பகீஹுத்தீன்    

Thursday, May 4, 2017

யாருக்கு யார்மேல் பயம் ?

ஒரே குழுவாக செயல்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக இருந்துகொண்டு அராஜகங்கள் அநியாயங்கள் அனைத்திலும் பங்குபெற்றுவிட்டு பலனையும் பெற்று அனுபவித்து ருசிகண்ட பூனையாய் அத்தனையும் தனக்கேவேண்டுமென எழும் பேராசையால் வரும் பிரிவுகள் காலம் காலமாக மனிதர்களிடையே அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது சரித்திரங்கள் சொல்லும் உண்மை. அதை நாம் வாழும் காலத்தில் பன்னாட்டு அரசியலில் பார்வையாளனாக பார்த்ததுபோல் இப்போது அதே அரசியலில் பாதிக்கப்பட்டவனாக தமிழன் இன்று இருக்கிறான்.

அமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்

இந்தியாவில் கோடை காலத்தில் வெயில் கொடுமை தாளாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மொத்தமாக மக்களைக் கொல்லும் விபத்துகளைத் தடுப்பது குறித்தே நமது அரசுகள் கவலையற்று இருக்கின்றன. இதில், உதிரிச் சாவுகளைப் பற்றி மட்டும் எப்படி கவலைப்பட போகின்றன?

அமீரகத்தில் இந்தியாவை விட வெயில் அதிகம். கோடை காலத்தில் உச்சபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் (123 டிகிரி பாரன்ஹீட்) வரை எல்லாம் வெப்பநிலை பதிவாகும். ஆனால், வெயில் கொடுமை காரணமாக யாரும் இறப்பதில்லை. காரணம், வெயிலில் வேலை பார்ப்பவர்கள் குறித்து அமீரக அரசாங்கம் செலுத்தும் அக்கறை. கோடை காலத்தில் (ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை) மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும். இவற்றைக் கண்காணிக்க ரோந்துப் படை சுற்றிக் கொண்டிருக்கும்.


ஏதாவது ஒரு நிறுவனம் விதியை மீறி, வெயிலில் வேலை செய்ய வைக்கிறது என்றால், அவ்வாறு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். ஆறு தொழிலாளர்கள் என்றால், ஒரு தொழிலாளருக்கு 5000 திராம்ஸ் வீதம் மொத்தம் 30,000 திராம்ஸ் ( ரூ.5,40,000 அபராதம்) விதிக்கப்படும்.

இத்தனைக்கும் அமீரகத்தில் வெயிலில் பார்ப்பவர்கள் யாரும் அந்நாட்டு குடிமக்கள் கிடையாது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளிலிருந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள்தான். அவர்களை மதிய வெயிலில் வேலை பார்க்க வைக்காமல் அந்நாட்டு அரசாங்கம் பாதுகாக்கிறது.

Monday, May 1, 2017

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

LinkWithin

Related Posts with Thumbnails