Thursday, February 2, 2017

அவன் நம் தாய்மார்களை விட கருணையில் மேலானவன்

தூக்கிப் போட்டு கொஞ்சி விளையாடும் குழந்தை அந்த நிலையில் தாயின் முகத்தில் சிறுநீர் பெய்தால், அட என் செல்லமே, என் கண்ணுக்கு ஒண்ணுக்கு வந்துட்டதாக்கும் என்று செல்லமாய் சிணுங்கி தன் முகத்தையும் குழந்தையையும் பொறுமையாய் சுத்தம் செய்யும் தாயை விடவும்.......
இலட்சோப இலட்சம் அளவுக்கு கருணையின் வடிவாக விளங்கும் பேரிறைவன், அறியாமல் அவன் மக்கள் செய்யும் சில தவறுகளை பிழைகளை தப்புகளை மன்னிக்காமல் இருந்து விடுவானா?
அதற்கெல்லாமும் நாளை மறுமையில் குற்றம் பிடிப்பான் என்று விளக்கம் தர இங்கே யாராவது முயன்றால்......

என் கோபத்தை என் கருணை மிகைத்துவிடும் என்று அவனே தன்னைப்பற்றி கூறி இருப்பது பொய்யாகி விடுமே. இல்லை தவறுகளுக்கு தண்டனை காட்டாயம் உண்டு என்று சொல்ல வந்தால், அவனின் இயல்பை அவனே மாற்றிக் கொள்வான் என்று கூறுவது போலாகாதா? அப்படி மாற்றிக் கொண்டால், மனிதனுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடாதா?
என் உறுதியான நம்பிக்கை அவன் நம் தாய்மார்களை விட கருணையில் மேலானவன், அதனால் நிச்சயம் மன்னிப்பவனே !

Raheemullah Mohamed Vavar

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails