Wednesday, December 21, 2016

இறையறிந்த ரகசியங்கள் ...

அலைகள் நடனமாடும்
கடல் நீரில்
உப்பு கரிப்பு
இறையறிந்த ரகசியம் ....
மேகங்கள் கறுத்து
ஆகாயம் பொழிந்திடும்
மழை முத்துக்கள்
இறையறிந்த ரகசியம் ....

வானத்துத் தெருக்களில்
நிலவு புன்னகைக்க
நட்சத்திரங்களின் ஊர்வலம்
இறையறிந்த ரகசியம் ....
விண்ணக முகப்பில்
கதிர்கள் விரிக்கும்
சூரியனின் பிரகாசம்
இறையறிந்த ரகசியம் ....
உரசிட நெருங்கும்
புவியடுக்குகளின் அதிர்வில்
நிகழ்ந்திடும் பூகம்பம்
இறையறிந்த ரகசியம் ....
காற்றசைவில் உருவாகும்
மென்மையான வேகமான
தென்றலும் புயலும்
இறையறிந்த ரகசியம் ....
சுருளும் அலைகள்
கோபத்தில் கொப்பளிக்கும்
கடலின் சுனாமி
இறையறிந்த ரகசியம் ....
மரணத்தை சுவைத்ததும்
மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட
சுவர்க்கமும் நரகமும்
இறையறிந்த ரகசியம் ....

அப்துல் கபூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails