Sunday, October 23, 2016

தனி ஒருவன்

மரம்தான்...அவன்
தனிகட்டைதான்!.
துறந்தான் குடும்பம்...
அவன் சவம்தான்!

இணைந்த கைகள்
ஓசைதரும் என்பது




உண்மை என்றால்,
இல்லாள் இல்லாத வாழ்வு
பூஜ்ஜியம்தான்!

மக்கள் அருகில் இல்லாவிட்டால்

அவன் அனாதைதான்!


தனி ஒருவன் சாதிக்கலாம்

சில நேரத்தில்

தனி ஒருவனாய் வாழ முற்பட்டால்

அது முள்மேல் சேலைதான்.


ஆயிரம் இருந்தும்

ஏது "பயன்"?

பெற்ற ஒரே "பையன்"

உறவில் இல்லையென்றால்?


எல்லா "புகழ்" வந்து சேர்ந்தாலும்

அருமை "மகள்" அருகில் இல்லையென்றால்

ஆறா ரணமல்லவா?


ஆனது ஆகட்டும்,

அந்த சுய திமிர் தீரட்டும்

என நினைத்து திருந்தினால்

கோடி நன்மை!


கோடி இருந்தும்

கூடி வாழா வாழ்க்கை

சாப தரித்திரம்!

பாத்திரம் இருந்தும்

சாதம் இல்லா நிலைபோல்

ஆத்திரத்தில் குடும்பத்தை பிரிவது!


சிந்தனை செய்!

உன்னையும் சுற்றத்தையும் சீர் படுத்து!

இப்படித்தான் இருப்பேன்

என்னும் அகங்காரம்!

விரைவாய் உன் வாழ்வு முடிவுக்கு

நீயே வைக்கும் அலாரம்!


             - முகமது தஸ்தகீர்
http://almighty-arrahim.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails