Wednesday, August 24, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ... ஒன்பதாம் பாகம் .../ அப்துல் கபூர்


இல்லம் நுழைந்தேன் ...
நினைவு நார்களில் ஞாபகப் பூக்களை தொடுக்கிறேன் ....

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
குமரி மாவட்ட திசையினை அடைந்து விசையினை குறைத்து ஓசையினை அமைதியாக்கிய ரயில் எம்மை இறக்கிடும் ஆசையினை உரைத்தது ...
குறைந்த பட்ச பரபரப்பு நிலவிய நாகர்கோயில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி நாங்கள் செல்லுமிடம் புதுத்தெரு என்று கூறி மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தோம் ....
விடலை பருவத்தில் சுற்றித் திரிந்த அழகிய இடலை ஊரின் சுகமான தென்றல் எனது உடலை தழுவி நலம் விசாரித்தது ....
வீட்டில் கால்கள் பதித்ததும் எனது வாழ்க்கை ஏட்டில் திருப்பங்களும் விருப்பங்களும் நிறைந்த புதிய அத்தியாயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் இறைவனின் அருட் பேனா தெளிவாய் எழுதப் போகிறது என்பதை சற்றும் அறியாதவனாய் ....
நானும் எனது நேசத்திற்குரிய தாய் மாமா மர்ஹூம் AVM சின்னப்பா அவர்களும் எங்களது இல்லத்தில் நுழைகிறோம் ....
முற்றும் ...

அழகிய குறிப்பு ...
குவைத் ஈராக் தொடரை எழுதிட துவங்குகையில் உங்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிட்டுமா என்றெண்ணிய எனக்கு உங்களிடமிருந்து எட்டிய அமோக ஆதரவு என்னை மகிழவும் நெகிழவும் வைத்தது ...
தொடர்களை படித்து விருப்பங்களிட்டு கருத்துகளிட்டு பகிர்வுகளிட்டு பயணித்தவர்களுக்கும் ....
தொடர்களை படித்தும் விருப்பங்கள் கருத்துகள் எதுவும் இடாமல் அமைதியாக பயணித்தவர்களுக்கும் ...
தொடர்களை படித்து நேரிலும் அலைபேசியிலும் பாராட்டியவர்களுக்கும் ...குறிப்பாக பாசத்திற்குரிய அண்ணன் ரஹீமுல்லாஹ் வாவர் அவர்களுக்கும் ...
எனது தொடரை தவறாமல் தமது சீசன்ஸ் நீடூர் வலை தளத்தில் பதிவு செய்து என்னை பெருமைபடுத்திய முகம் பார்த்து பேசாத அகம் சார்ந்து பேசும் முகநூலின் மூத்த சகோதரர் Mohamed Ali அவர்களுக்கும் ...
(எனது முந்தைய பெரும்பாலான பதிவுகளையும் பதிவிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) ...
இறையருளால் நான் விரும்பி வாழும் உகாண்டா மண்ணை திரும்பிப் பார்க்கிறேன் என்கிற தலைப்பில் கட்டுரை எழுத நான் எண்ணியிருக்கும் நிலையில் ...
நடப்பு தொடரை நூலாய் எழுத ஆலோசனை வழங்கிய அன்பு சகோதரர்கள்  Haja Mohideen - Tiptop Ali மற்றும் நண்பன் Abdul K Ayu ஆகியோருக்கும் எனது நன்றியினையும் பாராட்டினையும் உரித்தாக்குகிறேன் ...
26 ஆண்டுகள் கழிந்தாலும் நான் சந்தித்து மனதில் பதிந்த நிகழ்வுகளை எழுத்து வாயிலாக கோர்த்து முகநூலில் இழுத்து வருவதற்கு பேரருள் நல்கிய பேறிறைவனுக்கும் மகத்தான நன்றியினை உரித்தாக்குகிறேன் ....
அன்புடன்

அப்துல் கபூர்
Abdul Gafoorர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails