Sunday, June 5, 2016

அத்தனை பேருமே மதிக்கும் மாண்பான செயல் நோன்பு.

Iskandar Barak


இன்று ...அரப் நாட்டை பொறுத்தவரை அரபிய மாதமான ஷஃபான் மாத பிறை 29 ம் நாள்
இரவு 30 வது நாளை எதிர்நோக்கும் இரவென்பதால் இந்த இரவுக்குப்பெயர்
யவ்முஷ் ஷக் .....அதாவது
விடியும் நாள் இதே ஷஃபான் மாத 30 ம் நாளா அல்லது அடுத்த மாதமான ரமளான் மாத முதல் நாளா யென்ற சந்தேகமிருப்பதால் இதற்கு சநதேகத்திற்குரிய இரவு சந்தேகத்திறகுரிய நாள் யென அழப்பதுண்டு....காரணம்

அரபி தேதியில் 31 யென்பதே கிடையாது ...29 ம் 30 மாகவே மாதங்கள் முடிவடைவதால்
ஆங்கில தேதியின் கணக்குப்படி வருடத்திற்கு 11 நாட்கள் குறைவாகவே வருகிறது ..............ஆகவே
இன்று இரவு 99 சதவீத நண்பர்களின் எண்ணப்படி ..பிறை பார்க்கப்பட்டு முதல் நோன்பு வைப்பதற்குரிய ரமளான் முதல் நாள் வாய்ப்பே அதிகமென படுகிறது
........
இன்ஷாஅல்லாஹ் இங்கு இன்று இரவு நோன்பெனில் நமது தமிழகத்தில் நாளை இரவு நோன்பாயிருக்க அதிக வாய்ப்புண்டு.
இறை நாட்டம் எதுவோ தெரியவில்லை ...பொறுப்போம்.
தினமொரு பதிவாக ...நோன்பில் சமூக நல்லிணக்கம் மத நல்லிணக்கம் மனித நேயம் பேனுதல் போன்றவற்றை வழியுறுத்தி முடிந்தவரை பதிவிடுவேன் கடந்த ஆண்டுகளைப்போல
காரணம் .........நோன்பு முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமல்ல
இந்து கிருஸ்துவ புத்த சீக்கிய சைன அத்தனைபேருமே மதிக்கும் மாண்பான செயல் நோன்பு.
இதை நடைமுறை உதாரணத்தோடு பதிவிடுவேன்

அல்ஹம்துலில்லாஹ் ........ரமளான் கரீம்
மலேசியாவில் பிறை பார்த்தாகிவிட்டதால் இரவு நோன்பு


கத்தாரிலிருந்து Iskandar Barak

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails