Tuesday, March 8, 2016

இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன ?! (STATUS OF WOMEN IN ISLAM)... ?!..


1. மனித இனத்தைப் பெருக்கிடச் செய்வதில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் சரியான பங்குண்டு. அதில் பெண், ஆணுக்கு முற்றிலும் சமமானவள்(அல்குர்ஆன்: 49:13, 4:1 )
2. தனக்கென இருக்கும் தனிப்பட்ட பொறுப்புகளிலும், குடும்பத்தின் மொத்த பொறுப்புகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே! அதேபோல் அவர்கள் செயல்களுக்கு உரிய கூலியைப் பெறுவதிலும் அவர்கள் ஆண்களைப் போன்றவர்கள் தான்(அல்குர்ஆன்: 3:195, 9:71, 33:35-36, 66:19-21)
3. கல்வியையும், அறிவையும் தேடிப்பெறுவதில் ஆண்களுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு
4. ஆண்களைப்போல் பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு. அவளது கருத்துக்களை அவள் பெண் என்பதற்காகக் காரணங்காட்டி புறக்கணித்திட முடியாது. (திருக்குர்ஆன் 58:1-4, 60:10-12 )
5. பெண்களும் அவர்களுக்குரிய முறையில் பொதுவாழ்வில் ஈடுபடலாம்..குறிப்பாக நெருக்கடி காலங்களில் , போர் காலங்களில் பொதுவாழ்வில் பங்குகொண்டு பெரும்பணி ஆற்றியிருக்கின்றார்கள் என்பது இஸ்லாமிய உண்மை வரலாறு

6. ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கும், சம்பாதித்தவற்றை தங்களுக்கென வைத்துக் கொள்வதற்கும் பெண்களுக்கு உரிமையுண்டு. குற்றங்கள், இழப்புகள் ஆண்களுக்கு என்ன தண்டனையோ ,என்னென்ன நஷ்டஈடு தரப்படுமோ அதேபோல் அவர்களுக்கும் தரப்படும். (2:178, 4:45,92-93 )
7. பெண்களின் உரிமைகள், முஸ்லிம்களின் நம்பிக்கையில் ஒருபகுதி ...ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேற்றுமைகளை கற்பித்திடுவதை இஸ்லாம் சகித்துக் கொள்வதில்லை. பெண்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களே என செயல்படுபவர்களைத் திருக்குர்ஆன் பல இடங்களில் கண்டித்துள்ளது. (16:57-59, 42:47-50, 43:15-19, 53:21-23 )
8. பெண்களுக்கு சொத்திலும் உரிமைகளைத் தந்தது. முன்னோர்களின் சொத்துக்களில் பெண்களுக்கும் பங்கு தரவேண்டும் எனக் கட்டளை இட்டுள்ளது இஸ்லாம்.( 4:11-14, 176 )
9. இஸ்லாம் பெண்களுக்கு உடன்படிக்கைகளுக்கு உயிர் தரும் உரிமையைத் தந்திருக்கின்றது ...நீதியை நிலைநாட்டுவதில் அவர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது ( 2:282 )... (இதன் விளக்கம் பின்னூட்டத்தில் உள்ளது)
10. ஆண்களுக்குத் தரப்படாத சில சிறப்புரிமைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை( 31:14-15, 46:15 )
11. தொழுகையில் பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் நின்று தொழுது கொள்ளலாம்
12. பெண்கள் தங்களது கண்ணியம், கௌரவம், தூய்மை, கற்பு ஆகியவற்றை பர்தாவை அணிந்து கொள்வதின் மூலம் காத்துக் கொள்கின்றார்கள். இதனை இஸ்லாம் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தித் தந்துள்ளது. ( 24:30-31 )
13. இஸ்லாத்தில் பெண்களின் நிலை மிகவும் உயர்ந்தது என்பதும், அது முற்றிலும் அவர்களின் இயற்கைத் தன்மைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்திருக்கின்றது பெண்களுக்கு என்னென்னெ தேவையோ அவை அனைத்திற்கும் இஸ்லாம் வகை செய்தே இருக்கின்றது. பெண்களின் கடமைகளுக்கும் உரிமைகளுக்கும் இடையேயுள்ள சமநிலை பாதுகாக்கப் பட்டுள்ளது.(திருக்குர்ஆன்: 2:228)
மேற்காணும் பட்டியல் இஸ்லாம் குரல் எனும் இணையதளத்தில் நான்படித்ததை இங்கே சுருக்கமாக பதிவு செய்துள்ளேன் .. இவை ஒவ்வொன்றின் மிகதெளிவான விளக்கங்கள் http://islamkural.com/?p=4397 ல் உள்ளது... இஸ்லாம் மட்டுமே ஆரம்பம் முதல் இறுதிவரை ஆண்களையும், பெண்களையும் சரிசமமாக மதித்து சமூக, இல்லற, பொருளாதார போன்ற அனைத்திலும் சம உரிமை வழங்கியுள்ளது என்பது மனித குலத்திற்கான தனி சிறப்பு ...
அன்புசகோதரர்களே !.. நாம் அனைவரும் இதனை கண்டிப்பாக அறிந்து கொள்வதோடு , வாழ்க்கையில் செயல்படுத்துவதோடு , இஸ்லாமிய மார்க்கம் பெண் விடுதலைமார்க்கம் என்கிற உண்மையை அஞ்ஞான இருள் துடைக்க வந்த அரபுலகத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன என சட்டமியற்றியது மட்டுமல்ல, பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி, தாம் ஒரு உன்னதமான சமூகம் என நிரூபித்த செய்திகளையும் பிற மத மக்களுக்கும் நாம்ஒவ்வொருவரும் நிச்சயம் எத்தி வைக்க கடமைப்பட்டுள்ளோம்....
- தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails