Wednesday, March 30, 2016

உங்கள் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று ?

 Abu Haashima

" பசியோடிருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீனைப் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்த்து "

இந்த கல்வி விழிப்புணர்வு கூட்டங்களில்
பேசும் பெருசுகள் மறக்காமல் சொல்லும்
ஏதோ ஒரு நாட்டின் பழமொழி இது.

அதைவிட அழகான ஒரு சம்பவம் அரபு நாட்டில் நடந்தது.
" எனக்கு மீனும் வேண்டாம்.
மீன் பிடிக்க கற்றுத் தரவும் வேண்டாம் .
மீன் கடையை மட்டும் காட்டு போதும்" னு சொன்ன ஆளுதான்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ( ரலி ).


மக்காவிலிருத்து மதினா வந்த அகதி.
வழக்கம்போல மதினா அன்சாரித் தோழர்கள் அவரை தங்கள் சகோதர்ராக ஏற்று உதவி செய்ய முன் வந்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அதையெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு ....
" மதினாவின் கடைவீதியை காட்டித் தாருங்கள். மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றார்.

கொஞ்சநாளில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மதினாவின் மிகப்பெரிய செல்வந்தராகத் திகழ்ந்தார்.

" உங்கள் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று ?" என்று அவரிடம் கேட்டபோது....
" மற்ற வியாபாரிகள் ஒரு ஒட்டகத்துக்கு
கணிசமான லாபம் வைத்து விற்றபோது
ஒட்டகத்தின் கயிறு மட்டும் எனக்கு லாபமாக கிடைத்தால் போதும் என்று நினைத்து வியாபாரம் செய்தேன். என் வியாபாரம் அமோகமாக நடந்து வெற்றி கிடைத்தது " என்றார்.
ஒருமுறை ஒரேநாளில் பத்தாயிரம் ஒட்டகம் கூட இவர் வியாபாரம் செய்ததாக கூறுகிறார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் நபிகளாரின் நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.
அவரைப் பற்றி ஒரு கூடுதல் தகவல்.

" எவ்வளவு மகர் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறேன் . பெருமானாரின் மகள் ஃபாத்திமாவை மணமுடிப்பதற்கு "
என்று தனது ஆசையை ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்.

" நபிமார்களின் பெண்பிள்ளைகள் பணத்துக்கு விற்கப்படுவதில்லை " என்று பதில் சொல்லி அனுப்பினார்கள் வள்ளல் நபிகள்( ஸல் ) அவர்கள்.

இந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
தனது திருமணத்துக்கு நபிகளாரை அழைக்கவில்லை.
ஒருநாள் கடைவீதியில் அவரைக் கண்டு அவரது ஆடையில் மஞ்சள் நிறம் இருப்பதைப் பார்த்துதான் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதை நபிகள் தெரிந்து கொண்டார்கள்.
அவருக்குத்தான் நபிகள் ...
" பாரக்கல்லாஹு .... " என்ற வாழ்த்தை சொன்னார்கள்.
அதுவும் கல்யாணம் முடிந்து 2 நாள் கழிந்த பிறகு.

இதைத்தான் இன்றைய திருமண அழைப்பிதழ்கள் திருமணத்திற்கு முன்னரே தாங்கி வருகின்றன.
மாப்பிளை பேரு
பொண்ணு பேரு இருக்கோ இல்லையோ
துஆ கட்டாயம் இருக்கணும்.
இது என்ன டிசைனோ தெரியலே.

தங்கள் மகள் ஃபாத்திமாவுக்கும்
அலி ( ரலி ) அவர்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்த பிறகு அவர்களுக்கும் நபிகள் வாழ்த்து சொன்னார்கள்.
இந்த வாழ்த்தை யாரும் சொல்வதில்லை.
ஏன்னு தெரியல.
 Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails