Friday, June 12, 2015

படச்சோனே ...

அல்லாஹ்வைத் தமிழில் எப்படி அழைப்பது என்பது குறித்து பலருக்கும் பலமாதிரி அபிப்பிராயங்கள் இருக்கின்றன.
இறைவன் என்று சொல்லலாமா ?
அது சரியா என்று கேட்கிறார்கள்.
மனதில் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு ஆண்டவன் என்றாலும் இறைவன் என்றாலும் அது அல்லாஹ்வைத்தான் குறிக்கும்.
இந்த விஷயத்தில் கேரளா முஸ்லிம்கள் தெளிவு.
குமரி மாவட்ட முஸ்லிம்களிலும் ஏராளமானவர்கள் தெளிவுதான்.
அவர்கள் " படச்சோனே " என்பார்கள்.
அதற்கு " படைத்தவனே " என்பதே பொருள்.
அல்லாஹ் தனது தூதருக்கு இறக்கிய குரானின் முதல் அத்தியாயத்திலும் ...


" ஓதுவீராக ! படைத்தவனின் திருப்பெயரால்.. இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன்தான் படைத்தான் ! " என்று கூறுகிறான்.

" ரப்பு "
படைத்தவன்.
இறைவன் ... தன்னை படைத்தவன் என்றே முதன் முதலில் அறிமுகம் செய்து கொள்கிறான்.
அதன் அடிப்படையிலேயே மலையாள முஸ்லிம்களும் குமரிமாவட்ட முஸ்லிம்களும் " படச்சோனே " என்றும்
" ரப்பே " என்றும் அல்லாஹ்வை அழைக்கிறார்கள்.

சொல்ல இனிமையாகத்தான் இருக்கிறது.

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails