Tuesday, February 10, 2015

‘உம்மா’ என்று அழைக்கும் போது பாசம் மீண்டும் உயிர் பெறுகிறது !

உம்மா’…
********

அன்பு என்றால் என்னவென்று
நீ தானே கற்று கொடுத்தாய் !
துன்பம் வந்தால் கூட சுகமாய்
வந்து முட்டு கொடுத்தாய் !

விளையாட்டு காயங்களை கூட
விபரீதமாய் புரிந்து கொண்டு
படுக்கையில் காவல் இருப்பாய் !

தான் சாப்பிடா விட்டாலும்
நீ சாப்பிட்டாயா என்று நூறு
முறை கேட்டு வைப்பாய் !

பசி என்றால் பொறுக்க மாட்டாய்
ருசியாக செய்து தருவாய் !
திண்ணையில் இருந்தால் கூட
பத்து முறை கூப்பிட்டு வைப்பாய் !

அதிர்ந்து கூட பேச மாட்டாய் !
ஆத்திரப்பட்டு திட்ட மாட்டாய் !

வெளி உலகம் தெரியாமல் இருந்தாய் !
அதனால் வெளி வேசமும் அறிய மாட்டாய் !

வெளியில் போனா கூட
வாசல் பார்த்து காத்து கிடப்பாய் !

அன்பால் அணைத்து நின்றாய் !
உயர் பண்பால்
உயர்ந்து நின்றாய் !

‘உம்மா’ என்று அழைக்கும் போது
பாசம் மீண்டும் உயிர் பெறுகிறது !
போகும் உயிர் கூட
சுவையாய் தானே தெரிகிறது !

வஞ்சமில்லா உன் முகம் பார்த்து
வாஞ்சையோடு உன் மடி சாய ஆசை !

[பிப்ரவரி - 10 -1997 தாயார் - இறைவன் அழைப்பை ஏற்ற நாள் ]

இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை தொடர இருக்கிறோம்.

யா அல்லாஹ்! எங்கள் பெற்றோர்கள் செய்த பாவங்களை மன்னித்து அவர்களை சுவர்க்க வாதிகளாய் ஆக்கி வைப்பாயாக …
அனைவரையும் இம்மையிலும், மறுமையிலும் நல்லோர்கள் கூட்டத்தில் ஆக்கிவைப்பாயாக …..

யா அல்லாஹ் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என்னை பெற்றோர்கள் வளர்த்தது போல் நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக ஆமீன்
ஆமீன் யா ரப்பில் ஆலமீன்……
(அல் குர் ஆன் 17:24) .


                                           Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails