Monday, January 12, 2015

:"மது" தனிமனித & சமுதாய கேடு

இரண்டு வருடங்களுக்குமுன் எமது தாயார் பஞ்சாயத்து தேர்தலில் நின்றபொழுது என் நண்பர் என்னை அழைத்து "பசங்களுக்கு சரக்கு வாங்கி தந்தால் நிச்சயம் ஜெய்த்துவிடலாம்" என்றார். அதற்க்கு அவர் தோற்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று கூறிவிட்டேன். தனிமனித இழப்புகள் சமுதாய இழப்புகளைவிட பெரிதல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

இஸ்லாமிய மார்கத்தை ஏற்க்கும் முன் எனக்கும் குடிப்பழக்கம் இருக்கத்தான் செய்தது அதற்க்கு காரணம் அது அவமான சின்னமாக என் சமுதாயத்தில் இருந்ததில்லை. ஊரும் சமுதாயமும் குடும்பங்களும் அதனை ஏற்று பழகிஇருந்தது, எனவே குடியில் பெரும் நாட்டம் இல்லாத எனக்கும் அந்த பழக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இஸ்லாமிய சமுதாயம் என்னை மாற்றியது! எந்தவொரு மத விழாக்களின்பொழுதும் டாஸ்மாக் நிரம்பி வழிவதையும் பார்க்க முடியும்! ஆனால் இஸ்லாமிய பண்டிகையை கவனித்தவர்களுக்கு தெரியும் குடி பழக்கமு உள்ள ஒருசிலரும் அன்று குடிப்பதை விடுத்து தொழுகைக்கு சென்று விடுவார். ஆனால் மற்ற சமுதாயத்தில் குடிபழக்கம் இல்லாத சிலரும் விழா நாட்கள் அன்று போதைக்கு விலையாகிவிடுவார்.ஒரு முறை குடித்தால் அந்த இஸ்லாமியர் அந்த மது ரத்தத்தில் இருக்கும் வரை அவர் தொழ முடியாது மேலும் 40 நாட்களின் தொழுகை பாழாகி போகும் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியர்க்கும் தெரியும். எனவே இறையச்சம் அதிகம் கொண்ட சமுதாயத்தில் குடி பழக்கம் வெகு குறைவு, குடிப்பவர் கூட அதை வெளிப்படுத்த வெட்கப்படுவார்.
தீர்வு :
படைத்தவன் ஒருவன் நம்மை பார்க்கிறான் என்ற இறையச்சமும், குடி சமூக அவமானமாக கருத்தப்படும் சூழ்நிலை வரும் பொழுதும், மதுவிற்க்கு எதிரான போராட்டங்களுக்கு அவசியம் இருக்காது. இஸ்லாமே ஒரே தீர்வு இந்த நிலையை அடைய.

"தவறை தவறாக கருதும் சமுதாயமே ஒழுக்கத்தை பேணும்"
 

Rafeequl Islam T 
தொடக்கத்திலிருந்து  தொடர்ந்து படிக்க For more : Original : http://rafeeqsarticles.blogspot.in/2015/01/blog-post_11.html
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails