Friday, December 5, 2014

ஆயத்துல் குர்ஸி - அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.

ஆயத்துல் குர்ஸியின் தமிழாக்கம் :

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.

அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;,

அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா,

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன,

அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?

(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;.

அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.

அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது.

அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. (அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு. நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா 9585)

Ayatul kursi - ஆயத்துல் குர்ஸி -Sheiklh Sa'ad Al Ghamdi 



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails