Wednesday, October 15, 2014

சந்தோஷ_தருணங்கள் ‬- Suhaina Mazhar

மகன் லாமின் முஹம்மது ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் சைன் பண்ண போயிருந்தோம். சிக்ஸ்த் படிக்கிறான். வழக்கமாக 70-80 மார்க் தான் வாங்குவான். போன முறை 6த் ரேங்க் வாங்கியிருந்தான். மாஷா அல்லாஹ் இந்த முறை ஃபர்ஸ்ட் ரேன்க். பரிச்சை பேப்பர் வீட்டுக்கு கொடுக்க மாட்டாங்க. இன்னிக்கு தான் ஸ்கூல்ல பார்த்தேன். அப்டியே அள்ளிக்கலாம் போல மார்க் வாங்கி இருக்கார் சாரு. மேத்ஸ்ல 99, சயின்ஸ்ல 98, தமிழ்ழ 91, சோஷியல்ல 96, இங்கிலீஷ்ல 94 இப்படி....

எனக்கு சந்தோஷத்துல அழுகையே வந்திருச்சு. காரணம் வீட்டுல புக்கை எடுத்து வெச்சு படிக்கற பழக்கமே இல்ல. எப்ப பாரு கார்ட்டூன் சேனல் தான். ஹோம்வொர்க் மட்டும் தான் செய்வான். நானும் வீட்ல படி படின்னு புஷ் பண்ண மட்டேன். சொல்லித் தரவும் மாட்டேன். மாஷா அல்லாஹ் எப்டி எப்போ படிக்கிறான்னு புரிய மாட்டேங்குது. கேட்டா மிஸ் நடத்தும் போதே புரிஞ்சுக்குது, நான் மனப்பாடம்லாம் பண்ண மாட்டேன், சொந்தமா தான் எழுதுவேன்னு சொல்றான்.
அவங்க ஸ்கூல்ல அவன் மேத்ஸ் க்ளப் மெம்பர். மேத்ஸ்னா அல்வா சாப்பிடற மாதிரி அவனுக்கு. க்ளப்ல பெரிய க்ளாஸ் பசங்கள்ளாம் இருப்பாங்க. அவங்க போட திணறும் கணக்கெல்லாம் இவன் அநாயாசமா போடறான்னு மிஸ் சொல்றப்ப சந்தோஷமா இருக்கு... க்ளாஸ்ல எந்த கணக்குனாலும் லாமின் தான் முதலில் முடிப்பானாம். அதனால மிஸ் பசங்கள்ட்ட எந்த டவுட்னாலும் லாமின்கிட்ட கேளுங்கன்னு சொல்லி வெச்சிருக்காங்களாம். அல்ஹம்துலில்லாஹ்...

‪#‎பேர்_சொல்லும்_பிள்ளை‬

ஃபர்ஸ்ட் ரேன்க் வாங்கியதற்கு நேராக ஸ்கூல்ல இருந்து அவனை கூட்டிட்டு டாய்ஸ் கடைக்கு போய் எது வேணுமோ வாங்கிக்கன்னு சொல்ல, சார் இந்த ரிமோட் ஸ்டியரிங் கார் எடுத்துக்கிட்டாரு...

லாமின் தீனிலும் துன்யாவிலும் சிறந்து விளங்க துவா செய்யுங்கள் சகோஸ்.
 பாசத்துடன் Suhaina Mazhar
 தகவல் தந்தவர் Suhaina Mazhar
நன்றி http://www.tajmahalmasala.in

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails