Friday, October 10, 2014

"இதில் ஊதுங்கள்" என்று கூறினார். ஊதினேன்.

நண்பருடனான சந்திப்பு. நண்பர் சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பின் உறுப்பினர். அதனால் அவரைச் சந்திக்க அங்கு வரச்சொல்லி இருந்தார். அவருக்கு இரவு 11.30 மணி உழவன் எக்ஸ்பிரஸில் பயணம். அவரை ரெயில் நிலையத்தில் விட்டுவிடும்படி கூறினார்.

நாங்கள் கிளம்பும்போதே மணி 11 ஐ தாண்டி விட்டது. காஸ்மோவில் இருந்து வெளியில் வந்ததும் புகாரி வாசலிலேயே போக்குவரத்துக் காவலர் ஒருவர் வண்டியை ஓரம் கட்டும்படி சைகை காட்டினார். ஓரம்கட்டி அவரிடம் "நண்பரை ரயிலுக்கு அனுப்ப வேண்டும் நேரமாகிவிட்டது.அவசரம்" என்று கூறினேன்.
"சார்! ஒரே நிமிடத்திற்குள் உங்களை அனுப்பிவிடுகிறேன்.கவலை வேண்டாம்" என்று கூறி கையில் இருந்த குடிப்பதைக் கண்டறியும் கருவியைக் காட்டி "இதில் ஊதுங்கள்" என்று கூறினார். ஊதினேன். நான் குடித்து இருக்கவில்லை என்பதை அதன் மூலம் அறிந்த அவர் " சார்! நீங்கள் யார் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் இதைச் செய்ய வேண்டியது எனது கடமை. நீங்கள் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன், நீங்க போலாம் சார்" என்றார்.

அவசரத்தில் அவர் பெயரைக் கேட்கவோ மேலும் பேசவோ எனக்கு நேரம் இல்லை. பொதுவாக காவலர்கள் மீது அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகள் மீது காவலர்களுக்கும் பெரிதாக மரியாதை இருக்காது. இவர் என் மனதில் என்றும் உயர்ந்து நிற்பார்!!

Chennai City Traffic Police

M.m. Abdulla

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails