Thursday, September 4, 2014

சிந்திக்க சில நிமிடம்:

சிந்திக்க சில நிமிடம்:
*******************************

நான் பள்ளியில் படிக்கும்போது அப்போதுள்ள ஆசிரியர்களுடனான தொடர்பு அருமையானதாக இருந்தது. அப்போது அடிக்கொடுத்த ஆசிரியர்களெல்லாம் வில்லனாக தெரிந்தாலும் , தற்போது அன்றுரைத்த அவர்களின் வார்த்தைகளெல்லாம் இப்போது அமுதமாக இருக்கிறது. அப்போதைய ஆசிரியர்களின் நம் சமூகத்துடனான பிணைப்பு என்பது ஒரு இணக்கமாக இருந்தது.

”நீ பாய் தானே… தொழுகையில எப்படி உட்காருவ…எல்லோருக்கும் செய்து காட்டு… பாருங்கப்பா எப்படியொரு அருமையான ஆசனம் இவங்க தினசரி செய்றாங்கன்னு”

“தொழுகையில இவங்க தொழும்போது எப்படி அமைதியிருக்கும் தெரியுமா? மிலிட்டரியே தோத்துடும், அப்படியொரு ஒழுக்கம்…அந்த மாதிரி Pin Drop சப்தம் கூட வரக்கூடாது இந்த வகுப்பில ஒகே”

” வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுதிட்டு மதியம் லேட்டா வந்து Gate கிட்டே நிண்ணா… ஓ! பாய்ஆ, யப்பா அவங்களுக்கெல்லாம் Gate திற, வெள்ளிக்கிழமை நமாஸ் போயிட்டு வந்தா லேட்டா ஆகுமுன்னு தெரியாதா என்று வாட்ச்மேனை கேட்பார்?”

” ஏம்மா,,,ஏம்மா இப்படி இருக்கீங்க… நல்லா படிக்கிற பொம்பளை பிள்ளைய கல்யாணம்னு சொல்லி ஸ்கூல்ல விட்டே நிறுத்திருங்கிள்ள..ஏன்… அவள் நல்லா படிச்சா உங்க சமூகத்திற்க்குதானே நல்லது…பின்ன படிப்பறிவு இல்லாத சமூகமா மாறிடுவீங்கம்மா…சொன்னா கேளுங்க…என்று கெஞ்சிய வாத்தியார்கள்” உண்டு…

”படிக்கிற வயசுல என்னடா வெளி நாட்டுப்பயணம்….படிக்காம ஓட்டகமா மேய்க்கப்போற.. படிச்சிட்டு போடா, நல்லா சம்பாரிப்ப என்று அக்கறையோட அதட்டிய வாத்தியர்களும் உண்டு”

ஆனால்…ஆனால்…

தற்போதைய நிலவரம் அப்படி இருக்கிறதா? மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் உண்டான பிணைப்பு

அப்படி இருக்கிறதா?
ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
எப்படி வந்தது?
யார் ஏற்படுத்தியது?

பிள்ளைகளை வெறும் பள்ளிப்பாடங்களை கற்கும் இயந்திரமாக பெற்றோர்கள் நினைத்ததாலா? ஆசிரியர்களை பெற்றோர்கள் எப்படி அனுகுகிறார்கள்.

வாத்தியர், என்ற உள்ளப்பூர்வமான உச்சரிப்பு இன்று வெறும் வார்த்தையால் Staff என்றானது.. பிள்ளைகளை ஒரு பகுதி நல்லொழுக்கமுள்ளவராக உற்பத்தி செய்யும் ஆசிரியர்களுடனும், பள்ளி நிர்வாகத்துடனுமான நம்முடைய அணுகுமுறை சரியாக இருக்கிறதா?

இல்லை நம்முடைய அணுகுமுறையை மாற்றியமைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோமா?
உங்களிடமே விட்டுவிடுகிறேன்,,,..


Yasar Arafat

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails