Monday, September 15, 2014

எந்தவொரு முயற்சியிலும் பரந்துபட்ட பார்வையும் கூரிய சிந்தனையும் செலுத்தப்பட வேண்டும் .

ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உள ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் ... ஆங்காங்கே பொதுவுடமை கொள்கைகள் தாங்கி தங்கள் சமூகங்களை சக்திபடுத்த சில ஆர்வலர்கள் அமைப்புகளை நிறுவினர் .
ஆனாலும் விடிவு புலப்படவில்லை .
ஊருக்கு ஒரு கடவுள் , சாதியப் பிரிவுகளுக்குள் சண்டை ,தெருவுக்கோர் தேசியத் தலைவன் ,கூடி மகிழ திருவிழாக்கள் ,குருபூசைகள் என எல்லாவற்றிலும் ஏகபோக பிரிவுகள் ..!!

மஞ்சள் ,காவி என வெறிக்கும் நிறங்களில் டீசர்டுகள் ..,குழுக்கள் ..!!
விரும்பி செய்த எவற்றிலும் முன்னேற்றங்களோ,அறிவுசார்ந்த செயல்களோ இல்லை. மாறாக முட்டாள்தனங்களே குடிகொண்டுள்ளன .

இத்தகைய சமூகங்கள் தங்கள் சமூக நலனை உயர்த்த நெஞ்சில் தாங்கும் சாதிய அடையாளம் பொரித்த டீசர்ட் களில் மூலம் இரண்டு விஷயங்களே புலப்படுகின்றன .
1.வெறுப்பு தத்துவம்
2.வன்முறையாளர்காக சித்தரித்தல் .

மேற்சொன்ன விஷயங்கள் கச்சிதமாக கையாளப்பட்டு லாபம் அறுவடை செய்யப்பட்டுவிட்டன.

எல்லோரிலும் ஒரே கோபம் இருக்கிறது, இதே கோபம் ஜாதி, இனம், மதம் சாரந்து ஒடுக்கப்படும் மற்றைய சமுதாயத்திலும் இருக்கிறது,

இங்கே கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில் சிறுபான்மை சமூகமும் அத்தகைய நகர்தலுக்கு உட்படுவதை உணர முடிகிறது . குழுக்கள் ,தெருக்கள்,அமைப்புகள் என தொடங்கி டீசர்டுகளில் பூதாகரமாக வெடித்துள்ளது .

நீங்கள் எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் பரந்துபட்ட பார்வையும் கூரிய சிந்தனையும் செலுத்தப்பட வேண்டும் .

ஆரோக்கியமான ,ஆத்மார்த்தமான தேடல்களும் ,பார்வைகளும் முன் வைக்கப்படுமாயின் விடிவு பிறக்க நிறைமாதமாய் தயாராகவே உள்ளது.... ‪

  Ahamed Rila



 Ahamed Rila

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails