Wednesday, July 16, 2014

“மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! "

1. நான் மிகப்பெரிய பணக்காரன் எனக்கு ஏறக்குறைய ஏக்கர் கணக்கில் நிலம் புலன்கள் உள்ளது. ஆகவே எனக்கு “மரணம்” வரவே வராது எனச் சொல்லவோ !

2. நான் சமுதாயத்திற்கு பல சேவைகள் செய்த மிகவும் அந்தஸ்துடன் கூடிய சமுதாயத் தலைவர் ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ !

3. இல்லை....இல்லை......நான் “அல்ஹாஜ்” பல முறை ஹஜ் செய்துள்ளேன், தினமும் தொழுவேன், பெரிய தாடி வைத்துள்ளேன், அழகியத் தொப்பி அணிந்துள்ளேன் ஆகவே எனக்கும்தான் “மரணம்” வராது என்றோ !

4. அட போங்கங்க......நான் அன்றாடம் உழைத்துச் சாப்பிடக்கூடிய பரம ஏழைங்க.........நான் யாருக்கும் எந்த பாவங்களையும் செய்யாமல் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவனுங்கோ ஆகவே என்னை “மரணம்” அண்டவே அண்டாதுங்கோ என்றோ !

5. மார்க்கத்தில் பல பட்டங்கள் பெற்ற அறிவாளி நான்............தினமும் வீடும் மஸ்ஜித்மாக அல்லாஹ்வைத் தொழுதுகொண்டே இருப்பேன்.......வேண்டும் என்றால் எனது நெற்றியைப் பாருங்கள் “கருமை நிறத்தழும்பு” அதில் பதிந்து இருக்கும் என்றோ !



6. எனது கணவனுக்கு நல்ல பணிவிடையும், எனது பிள்ளைகளைப் நன்கு பராமரிப்பதிலும் சிறந்த பெண்ணாக விளங்குகிறேன் ஆகவே எனக்கும் “மரணம்” உடனடியாக வராது என்றோ !

7. வரதட்சணையாக 100 பவுன் நகைகளோ, மனைக்கட்டு நிலத்தில் புதிய வீடோ, புதிய வாகனமோ, சீர் வரிசைகளோ என எதுவும் பெண் வீட்டிலிருந்து நான் வாங்கவே இல்லை. ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ...................!

8. வட்டி வாங்குதல், பொய் சொல்லுதல், திருடுதல், மது அருந்துதல் போன்ற ஒழுக்கம் தவறியச் செயல்களை நான் செய்ததில்லை........ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ !

என இது போன்றவற்றைச் சொல்லி மரணத்தை தள்ளிப்போட முடியாது. “மரணம்” என்பது உங்களுக்காக உறுதி செய்யப்பட்ட ஒன்று !

சேக்கனா M. நிஜாம்

 …தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)

    ஒருவர் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ அந்த இடத்துக்கு அவர் போக ஒரு தேவையை ஏற்படுத்துவான்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ அஸ்ஸா (ரலி) ஆதாரம்: திர்மிதி (2237)
    அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6:61)
    (குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (திருக்குர்ஆன் 16:32)


 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails