Wednesday, July 2, 2014

எங்கள் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா?”

என் மருமகன் ஷாஜித் வாட்ஸப்பில் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். படித்துவிட்டு என் கண்கள் கலங்கின. உங்கள் கண்களும் கலங்கினால் அது நீங்கள் சரியான மனிதர் என்பதற்கான அடையாளம்.

ஒரு சவுதி டிவியில் மார்க்க அறிஞர் ஒருவர் மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில்சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சோமாலிய இஸ்லாமிய சகோதரர் ஃபோன் செய்து ஒரு கேள்வி கேட்டார். அதைக்கேட்டு அந்த அறிஞரும் அழுதார். நானும் அழுதேன். அவர் கேட்ட கேள்வி:

“எங்களிடம் சஹருக்கும் உணவில்லை. இஃப்தாருக்கும் உணவில்லை. ஆனால் நாங்கள் நோன்பு வைக்கிறோம். எங்கள் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா?” என்று கேட்டார்.

நம்மில் பலர் இஃப்தாரில் அது இல்லை இது இல்லை என்று கோபம் கொள்கிறோம். எதுவுமே இல்லாமல் ஒரு கூட்டம் இறைவனை அஞ்சுகிறது என்பதை நாம் உணரவேண்டும்.
சோமாலியாவில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்கும் உலகில் உள்ள எல்லா ஏழை மனிதர்களுக்கும் அன்றாடம் தேவையான உணவை இறைவன் கொடுக்கவேண்டும் என்று இந்த நேரத்தில் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். கூட்டுப் பிரார்த்தனைக்கு மிகுந்த ஆற்றல் உண்டு. அது நிரூபிக்கப்பட்ட ஒன்று. பிரார்த்தனை அற்புதங்களைச் செய்யவல்லது. இந்த மாதத்தின் பெருமையாலும் இறைவன் அந்த வேண்டுகோளை வெகு சீக்கிரம் நிறைவேற்றிவைப்பானாக, ஆமீன். அவர் அனுப்பிய தகவல் இதுதான்:
Nagore Rumi

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails