Friday, June 27, 2014

ரமலான்

ரமலான்- நிஷா மன்சூர்


ரமல் என்றால் கருக்குதல் என்று பொருள்.
கரும்பு விளைவிக்கப்பட்ட விளைநிலத்தில் அறுவடைக்குப்பிறகு கருக்குவார்கள்.அது எதற்காக...???
மண்ணின்/நிலத்தின் வளத்துக்காக.அப்போதைக்கு அவை கருக்கப்பட்டாலும் கருக்கப்படுவதன் நோக்கம் மீண்டும் உயிர்ப்புடனும் வளமையுடனும் வளரவேண்டும் என்பதுதான்.

அதுபோல நான்/என்னுடைய என்னும் மாயையான நம் சுயத்தைக் கருக்குவதற்கும் எல்லா படைப்பினங்களுக்கும் மூலமாக இருக்கும் ரட்சகனில் தன்னை அடையாளப்படுத்துவதற்கும் அந்த ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அற்புதமான பயிற்சிதான் நோன்பு என்பதாகும்.

ஹக்குதான் ஹல்க்காக உலவிக்கொண்டிருக்கிறது.ஆனால் அது ஹக்களவில் உருண்டுகொண்டும் புரண்டுகொண்டும் இருந்தாலும் ஹல்க்கின் தன்மைகளை விட்டும் முற்றிலுமாக ஒருபோதும் நீங்கிவிடுவதில்லை..!!

‪#‎இன்ஷா‬ அல்லாஹ்,நான் ரமலான் முதல் பதினைந்து உம்ராவுக்காக பயணப்படுகிறேன்.இறை அண்மையையும் இறை தரிசனத்தையும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களுக்கும் வலிமார்களுக்கும் உகப்பான வாழ்க்கை வாழ்ந்து அவர்களின் நேசத்தையும்,
ஆன்மீகத் தெளிவையும் அருள் பொருள் ஆரோக்கியத்தையும் இகபர நற்பாக்கியங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள பிரார்த்திக்கிறேன்;பிரார்த்தியுங்கள்.
 

நிஷா மன்சூர்

1 comment:

Anonymous said...

Thank you for the post.

Let the terrorists, whatever religion they belong, read, imbibe the spirit of goodwill. Let the holy Ramzan month be free from any bomb-blast from Yemen to Indonesia.

LinkWithin

Related Posts with Thumbnails