Thursday, October 31, 2013

பெண்ணல்ல நீ காவியம்...


இந்த நூற்றாண்டின்,
புரட்சிப் பெண் நீ ...
உனக்கு மட்டும்
எப்படி இந்த மனப்பக்குவம்...?

சொகுசை நம்பி,
சொந்தத்தை உதறும் காலத்தில்..
சொந்தத்தைத் தேடியும்,
சொப்பன வாழ்வை மறந்தும்,
சொகுசை உதர்கிறாய்...
பெண்ணே!!!
புரியவில்லை எனக்கு ..
சங்க காலத்து காவியப்பெண்ணா நீ...

பெண்ணே !!
உன்னால் பெருமை
உனைப் பெற்றவர்களுக்கு மட்டும் அல்ல...
பெண்ணாய்ப் பிறந்த அனைவருக்குமே..

உன் மன தைரியம் பாராட்டாமல்
என்னால் இருக்க முடியவில்லை..
உடம்பெல்லாம் புல்லரிக்குது,
உனை நினைக்கையிலே..
உன் மன பக்குவம்,
யாருக்கு வரும் அம்மா ...?

முடிவு எடுத்து விட்டாய்..
தாய் மண் உன் பாதம் மிதிப்பதாய்..
புறப்பட்டு விட்டாய் ..
இலட்சிய வாழ்வை அடைவதற்காய்...
சந்தோசம்..
எனக்கிதில் இரட்டிப்பு சந்தோசம்..

நாளை உன் பாதம்..தாய் மண்ணில்..
வெற்றி நடை போட வேண்டும்..!
மணவாழ்வு சிறக்க வேண்டும்..!
 நூறு தரம் இறையை வேண்டி,
மனமின்றி விடை பெறுகிறேன்..
                        ---------------------------

அன்புடன்..
நன்றி : http://manesu.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails