Saturday, September 28, 2013

விடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது






தொலைபேசி அழைப்பின் மணியின் ஒலி ஓசை
தொல்லை தரும் அழைப்போ!
தொல்லை தராத அழைப்போ!
கொள்ளையில் இருந்தாலும் அழைப்பின் ஒலி கேட்க
தொலைபேசியை ஓடிவந்து எடுக்கச் செய்கின்றது

ஒலிபெருக்கி வழியே வரும் ஒலி

'தூக்கத்தை விட தொழுகையே சிறந்தது'
தூக்கத்தை விட மனமில்லை

'தொழுகைக்கு விரைந்து வாருங்கள் (ஹய்ய அலஸ்ஸலாத்)'
தொழுகைக்கு விரைந்து வர மனமில்லை
விரைந்து வந்து தொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க மனமுண்டு

தொழுவதால் வெற்றி தொழ வாருங்கள் -
'வெற்றிக்கு வாருங்கள் (ஹய்ய அலல் ஃபலாஹ்)'

தொலைபேசி அழைப்பில் வெற்றி வரும் என்ற மனம்
தொலைபேசி எடுத்து பேசுவதில் வேகம்

தொலைபேசி தொல்லை தரும் நிலையாகி விட்டது
தொழுகைக்காக விடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும்.என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னு ஆஸ் (ரழி)
நூல் : அஹ்மத்

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். அல்குர்ஆன் 5:58


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails