Saturday, March 30, 2013

சொல்ல வேண்டியதை சொல்லு தவிர்க்க வேண்டியதை தவிர்!


  ஒரு முறை நாயகம் அருகில் ஒரு பெண் வந்து 'நான் கற்புக்கு களங்ம் வர தவறு செய்து விட்டேன்.அதனை நினைத்து இறைவனிடம் மன்னிப்பு தேடுகின்றேன்.இறைவன் மன்னிப்பானா' என்று மனமுருகி கேட்க நாயகம் மறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள் .அப்பக்கமும் சென்று அப்பெண்  அதையே தொடர நாயகமும் வேறொரு பக்கம் திரும்ப அந்த பெண் விடுவதாக இல்லாமல் தன் கவலையை வெளிப்படுத்த விரும்ப நாயகம் '  இறைவன் மறைத்து வைக்க  நீ ஏன் வெளிப் படுத்துகின்றாய்' என்றார்கள் .
பின்பு மார்க்க சட்டப்படி அவளுக்கு உரிய தண்டனை கொடுக்கப் பட்டபோது கூடி நின்ற மக்கள் எள்ளி நகைத்தனர் . நாயகம் நகைக்காதீர்கள் அப்பெண் இறைவனது மன்னிப்பை பெற்று விட்டார் அதனால் அவருக்கு சுவனம் கிடைக்கும்' என்று மற்றவர்களை கண்டித்தார்கள்
 சுவனம் கிடைக்கும்' என்று மற்றவர்களை கண்டித்தார்கள்


 உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா -- பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6309 அனஸ் (ரலி).

பிறரை  விமர்சனம் செய்பவர்கள் தங்களை ஒரு முறை உற்றுப் பாருங்கள்...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails