Wednesday, January 30, 2013

ஆத்மீகம் எளிய பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்.


இன்று ஆத்மீகம் என்றால்!
தொழுகுமிடம் நாடிப் போவது ,
இறைவனைத் தொழுவது ,நோன்பு வைப்பது,
இறை வசனங்களை ஓதுவது
புனித பிரயாணம் மேற்கொள்வது,
இறைவனைப் பற்றியும் இறையடியார்களைப் பற்றியும் பேசுவது,
மார்க்க புத்தகங்களைப் படிப்பது ,மார்க்க சொற்பொழிவுகள் செய்வது, கேட்பது மற்றும் மார்க்கத்தைப் பற்றி பிறருடன் விவாதிப்பது,.
ஆன்மீகப்  பெரியவர் அடக்கப்பட்ட சமாதிக்குச் செல்வது , அந்த சமாதிக்கு முக்கியம் கொடுத்து அங்கேயே முடங்கிக் கிடப்பது மற்றும் ஆன்மீகப்  பெரியவர் பற்றி துதி பாடுவது.
மார்க்கத்தைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருப்பது
இப்படியே வாழ்நாளை போக்கிக் கொடிருப்பதுதான் என்று  சிலர் நினைக்கிறார்கள் அவ்விதமே சில மார்க்க போதகர்கள் மற்றவர்கள் மனதில் உறைய வைக்கிறார்கள்.


   மார்க்கத்தில் தன்னை தாங்கள்தான் மிகவும்  மார்க்கம் சொல்லியபடி வாழ்வை இணைத்துக் கொண்டதாக வறட்டு சடங்குகளில் வாழ்நாளை கழித்துக்கொண்டிருப்பார்கள். பெரிய ஞானம் பெற்றவர்களாக பெருமையடைவார்கள் அவ்விதம் மற்றவர்களும் நினைக்க வேண்டுமென்று அரும்பாடு பெற்று ஆதாயம் தேட முயல்வார்கள்.
தன்னலம் ,மார்க்கம் ,ஆத்மீகம் ,சுவனம் பற்றி சிந்திப்போர் உடன் வாழும் மக்களை அறிவோர் இல்லை.அவர்களுக்கு உதவுவதுமில்லை. மார்கத்தோடு தம் வாழ்கையை குறுக்கிக்  கொள்கின்றார்கள்.இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானம் வேத நூல்கலைப் படிப்பதனால் அதனை மற்றவருக்கு எடுத்து சொல்வதால் மட்டும் வருவதில்லை.தினசரி நாம் மக்களோடு பகிர்ந்துக் கொள்ளும் நேர்மையான உதவிக் கரம் நம்மை உயர்த்தி வைக்கும். எளிமையான வாழ்கை, அனுசரித்துப் போதல் ,தம்மால் முடிந்ததை மட்டும் செயல் படுத்த முயலவேண்டும். இல்லையெனில் விரக்தி வர ஆத்மீகம் அகன்றுவிடும் . ஆத்மாவை நேசித்து  அடுத்தவர்களுக்காகவும் நாம் விடும் மூச்சு இருக்க வேண்டும். ஆத்மீகம் எளிய சேவை மற்றும்  பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்     

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails