Sunday, January 13, 2013

தாயும் சேயும் பொருள் அறியா இனிய ஓசை

வயிற்றில்  பாரத்தைக் கொடுக்க
வயிற்றை வீட்டுப் பிரிய
தொப்புள் கொடி அறுவை முடிய
மார்பகத்தில் பால் சுரக்க
மார்பகம் பாரமானது

வயற்றிலிருந்து பிரிந்த
து பாசத்தைக் கொடுத்தது
மார்பகத்திலிருந்து பிரிந்தது பசியைப் போக்கியது
பசிப்போனபின் அழுகைக் குரல் நின்றது
வயிறு நிறைந்தபின் உறக்கம் வந்தது


தூங்க வைக்க ஆட்டம் கொடுக்க பாட்டு கேட்டது
பாங்கின் ஒலியை காதில் ஊதிய ஓசையில் விருப்பம் கொண்டது
ஓசையின் ஆசை தொடரச் செய்தது
ஓசையின் பொருள் விளங்காமல் போனது

வளர்ந்த பின்னும் வளர்ந்தது பொருளற்று போனது
பாங்கின் பொருள் வளர்த்தவளுக்கும் அறியாமல் போனது
பாங்கை ஓதி ஊதியவர் பொருள் சொல்லாமல் போனார்
பாங்கின் பொருளறிந்திருந்தால் தொழுதிருப்பேன்

------------------------------
 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
-ஸஹீஹ் புகாரி ஹதீஸ் :604.

பாங்கின் அழைப்பும் அதன் அர்த்தமும்
------------------------------
*அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.

அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்

ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை
-------------------
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
- குர்ஆன்:6:72
"I am as My servant thinks I am. I am with him when he makes mention of Me. If he makes mention of Me to himself, I make mention of him to Myself. And if he makes mention of Me in an assembly, I make mention of him in an assembly better than it. And if he draws near to Me a hand's span, I draw near to him an arm's length. And if he draws near to Me an arm's length, I draw near to him a fathom's length. And if he comes to Me walking, I go to him at speed." (Hadist Qudsi: Bukhari, Muslim, Tirmidhi, Ibn Majah)


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails