Sunday, December 30, 2012

கலாச்சாரம் என்ற போர்வையில்...

நபியே!) உம்முடைய மனைவிகளுக்கும், உமது பெண் மக்களுக்கும் மூமின்களின் பெண்களுக்கும், அவர்கள் தலை முந்தானைகளை இறக்கிக் கொள் ளும்படியும் நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாமல் இருக்க இது எளிய வழியாகும். அல்லாஹ் மன்னிப்பவன் கருணையாளன் ஆவான். -அல்குர்ஆன் 33:59

மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)

(நபியே!) மூமினான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30)

கலாச்சாரம் என்ற போர்வையில் கண்டபடி வாழ்ந்து வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாமல் அடக்க ஒடுக்கத்துடன்,மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுத்து மற்றவர்களின் இச்சையை தூண்ட வாழாமல் நெறியுடன்     வாழ்ந்து இறையன்பைப் பெறுவோமாக.
-----------------------------------------------------------------------------

பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியுள்ளார்.
தமிழக, இந்தியப் பெண்கள் அனைவரும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிய மதுரை ஆதினகர்த்தர் பரிந்துரைத்திருந்தார்.
 "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்
 மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்  

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails