Thursday, October 4, 2012

லண்டனில் கந்தூரி !


 அட ! தலைப்பை பார்த்து தடுமாற வேண்டாம், தலைப்பிற்கான அர்த்தம் "ஒன்றுகூடும் விழா" அவ்வளவு தான். இடம்:  லண்டன். இங்கே ஷிர்க் இல்லை இணை வைப்புக்கான சூழல் இல்லை, கப்ரு வணக்கம் இல்லை (விழா நடக்குமிடத்தில் யாருடைய அடக்கஸ்தலமேதும் இல்லை)

இந்த இடம்  மஸ்ஜித் & இஸ்லாமிய தாவா செண்டருக்கு சொந்தமான பெரிய  இடம். இந்த சென்டர் 2 மஸ்ஜிதை நிர்வகிக்கிறது. மஸ்ஜிதுக்கு வெளியே அவ்வப்போது டேபிள்கள் போட்டு தாஃவா பணி செய்வார்கள். இந்த சென்டரின் கீழ் நர்சரி ஸ்கூல், மேல் நிலைப் பள்ளி மற்றும் ஹிஃப்ளு மதரசா ஆகியவை இயங்குகின்றன. இது வருடாந்திர விழாவாக நடக்கும் இடத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவில் கல்லூரி கட்டும் திட்டமும் இருக்கிறதாம் இன்ஷா அல்லாஹ்.

இதனை மேலாண் செய்பவர்கள் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நம் சகோதரர்களே. இங்கே வருடந்தோரும் ஒரு நாள் மட்டும் பெரிய அளவில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட கடைகளை அனுமதித்து குடும்பத்தோடு இங்கு வந்து ஒரு நாளை சந்தோசமாக களிக்கின்றனர். அதோடு சிறுவர்களின் மகிழ்வுக்காக ராட்டினம் போன்ற பல்வேறு விளையாட்டு அம்சங்களும் உண்டு. சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டு நடத்தி பரிசளித்து ஊக்கப்படுத்துவதும் உண்டு. மேலும் பிள்ளைகளை கழுதையில் ஏற்றி சவாரி செய்தல் (நம்மூரில் யானையில் ஏறுவது போல) மற்றும் முக பெயின்ட்டிங்,மருதானி  இடுதல் போன்ற பல்வேறு அம்சங்களும் உண்டு.


இதன் நோக்கம் நம்மவர்கள் பல்வேறு கலாச்சார அனாச்சார  நிகழ்வுகளுக்கு செல்லாமல் வருடத்தில் ஒரு நாளாவது இவ்வாறு கூடட்டுமே என்ற சேவை மற்றும் பொழுது போக்கு அம்சமாக செய்கின்றனர். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக  தொழ ஒழு செய்யும் வசதியுடன் வேளைக்கு தொழுகையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர். இங்கே வர நுழைவுக் கட்டணமும் உன்டு.

இந்தாண்டு சுமார் 5000 பேர் இங்கே கூடினர்.உள்ளே வர குட்டைப் பாவாடைகளுக்கு அனுமதியில்லை.இஸ்லாமிய அங்கீகரிப்பு ஆடை அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அனைத்து நிகழ்வுகளும் மார்க்க வரம்புகுட்பட்டே நடை பெறுகிறது. நான் சில வருடங்களாக விழாக்கமிட்டி சார்பாக தன்னார்வலராக நம்ம ஊரவர் சிலருடன் தொடர்ந்து கலந்து வருகிறேன். நம்மூரில் நடக்கும் இரு நிகழ்வையும் இது மாதிரி மார்க்க நெறிக்கு உட்பட்டு நடத்தினால் மறுமைக்கும் நலமாயிருக்குமே!--

கந்தூரி காட்சிகளின் புகைப்பட அணிவகுப்பு இதோ :-


 

M.H.ஜஹபர் சாதிக்
Source : http://adirainirubar.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails