Wednesday, October 24, 2012

போஸ்னியர் நடைபயணமாக புனிதமிகு ஹஜ் பயணம் -(காணொளி இணைப்பு )

நடைப்பயணமாக  புறப்பட்டு ஆயிரம் மைல்களைக் கடந்து நாற்பத்து ஏழு வயது போஸ்னியன் முஸ்லிம்  தனது ஹஜ்ஜுப் புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக   இறுதியாக புனிதமிகு மக்காவை  வந்தடைந்தார்.

தனது வாழ்வின் கனவை,நினைவை ,கடமையை நிறைவேற்றுவதில் மன உறுதியுடன் செயல்பட்டார் .

தன்னிடம் அதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாமையால் நடைப்பயணம் மேற்கொண்டதாக செனட்ஹட்ஜிக் சொல்கின்றார்  அவர்  வைத்திருந்த 200 (ஈரோஸ்) பணத்துடன்   சவூதிக்கு புறப்பட்டதாக சொல்கின்றார்  


 அவர் தனது சொந்த ஊர் பனோவிசிவிலிருந்து  3,600 miles (5,900 km) கடந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார் .அவர் கடந்து வந்த ஆறு நாடுகள் அவைகளில்  துருக்கி  , ஜோர்டான்  மற்றும்  சிரியா இவைகளும் உள்ளடங்கும். தன்னுடன் புனித 'குர்ஆனையும்,    கொடியையும், கொண்டு வந்தேன் அத்துடன் வழிக்காட்ட தேசப்படமும் வைத்திருந்தேன் ' என அறிவிக்கின்றார் .

நான் வரும் வழியில் பள்ளிவாசலில் மற்றும் பள்ளிக் கூடங்களில்,வீடுகளிலும்  படுத்து உறங்கினேன்.மக்கள் மிகவும் உதவினார்கள் . கரடு முரடான இடங்களையும் காட்டுப்பாதையையும் கடந்து போகிண்றீரே பயமில்லையா! என சிலர் கேட்டதற்கு 'அல்லாஹ் என்னுடன்  இருக்கும்போது எனக்கு ஏதற்கு பயமென்றேன்' என்றார்

அவர் வருவதற்குள் பெரும்பாலான ஹஜ் யாத்ரீகள்  வந்து சேர்ந்து விட்டார்கள் .இருப்பினும் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர் வந்து விட்டதாகவும் சொல்கின்றார் .

இறைவன் அவரது ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி வைப்பானாக.புனிதக் கடமையை ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக .ஆமீன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails