Sunday, October 21, 2012

முஸ்லிம் குடும்பத் தலைவிக்கு ஈது பெருநாள் வந்தால் வேலைதான் அதிகம்!

 பெருநாள் கொண்டாட்டத்தில்  பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!   

ஈது பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான். ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .
 பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.
 ஆண்கள் தொழுதுவந்த பின் குர்பானி கொடுத்துவிட்டு வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.


பெண்களுக்கு பொதுவாக  நாள் முழுவதும் வேலைதான்  ஈத் அன்று சமையலறையை விட்டு  வெளியே செல்ல எந்த நேரம் முடியாது .இந்த நிலையில் அவர்கள் எப்படி ஈத் பெருநாளை கொண்டாட முடியும் .
தமிழ்நாட்டு முஸ்லீம் கலாச்சாரத்தில்  பெருநாள் கொண்டாட்டங்களுக்கு  பெண்கள் பங்கு குறைவாகவே உள்ளது . அவர்கள்  புது துணி உடுத்துவதும்  தங்கள் குழந்தைகளுக்கு புதுத்துணி உடுத்தி மகிழ்வதிலும் திருப்தி அடைவதோடு  முடிந்து விடுகின்றது . அடுபங்கரையை விட்டு அவர்கள் வெளியே வருவதற்குள் பொழுது போய்விடும் .அதன்பின்பு தன் தாய் வீடு சென்று தன் தாய் வழி மக்களை (அதுவும் அதே ஊரில் இருந்தால் பார்த்து மகிழ்ந்து வருவார்கள்) 

ஒரு வேடிக்கை குர்பானி கொடுக்கப்பட்ட கறியை அவர் உறவினர் வீட்டுக்கும் அனுப்புவார் அந்த வீட்டிலிருந்து அங்கு குர்பானி கொடுக்கப்பட்ட கறி இந்த வீட்டுக்கு வரும் .இதை கொடுத்தனுப்ப அவர்கள் படும் பாடு அதிகம் .இன்றைய காலங்களில் ஆட்களும் கிடைப்பதில்லை.
பெருநாள் அன்றுதான் பெண்களின் வேலை அதிகமாகவே உள்ளது ஆனாலும் அதனை அவர்கள் மகிழ்வாக தங்களை உட்படுத்திககொள்வது சிறப்பாகத்த்தான் உள்ளது .

நாம் செய வேண்டியது முடிந்தவரை அவர்கள் வேலையை அன்றைய தினம் குறைப்பதற்கு முயல வேண்டும் மற்றும் அவர்கள் கூட இருந்து உதவ வேண்டும் . பெண்கள்  அனைவரும் ஒன்று கூடி தொழுவதற்கும் முயலவேண்டும் .

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails