Tuesday, October 2, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-5)

அன்புடன் புகாரி

படித்தேன் பிடித்தேன் 013

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள்.

ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள்.

இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது.

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோதரர் பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது.

புல்புல் என்று முகம்மது நபி அவர்களால் பிலால் அழைக்கப்பட்டார்.

எங்கள் மீதொரு
பௌர்ணமி பிரகாசிக்கிறது
அது மக்காவிலிருந்து
விடைபெற்று வருகிறது

என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்று.

அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் கேட்கலாம்.

இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை.
அதனோடு நீங்கள் குழைவது இசை.
குர்-ஆன் ஓதுதல் இசை
தொழுகைக்கான அழைப்பு இசை

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும்.





படித்தேன் பிடித்தேன் 014

நான் சவுதி அரேபியாவில் 18 வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன்.

எனக்கு வாழ்வளித்த நாடு என்ற நன்றியுணர்வு எனக்கு மிகவும் அதிகம். அங்குள்ள சில நல்ல விசயங்கள் எனக்குப் பிடிக்கும்.

ஆனால்....

வேலைக்கு ஆட்களைக் கொண்டுவருவதிலும், அவர்களுக்கான உரிய வேலையைக் கொடுப்பதிலும், விரும்பிய வேலையில் மாறுவதற்கான உரிமையைக் கொடுப்பதிலும், சம்பளம் தராமல் கொடுமைப் படுத்துவதிலும் சவுதி அரேபியாவில் நான் இஸ்லாமியச் சட்டங்களைக் கண்டதில்லை

பணி நிமித்தமாக வந்தர்களை ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குக்கூட பயணப்படவிடாமல் தடுப்பதிலும். எந்த ஒரு சாலை விபத்திலும் வெளிநாட்டவர்களையே பலிகடாக்களாய் ஆக்குவதும் அங்கே நான் கண்டவை.

பணியாளர்களுடன் பழகும் விதத்தில் ஒரு துளியும் அன்பும் பண்பும் இருக்காது.

பணியாளர்களைப் பணியாளர்களாகப் பார்ப்பதில்லை பெரும்பாலும் அடிமைகளாகத்தான் பார்ப்பதைக் கண்டிருக்கிறேன்.

இது எதையுமே நபிகள் நாயகம் விரும்பியதில்லை. அவரின் சொல் அவர் பிறந்த மண்ணில் இன்னும் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை.

சில நல்லவர்களைக் காணலாம் ஆனால் அதன் விழுக்காடு மிகவும் குறைவாகவே இருந்தது. இப்போது கொஞ்சம் மாறி இருக்கலாம். மாறி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


படித்தேன் பிடித்தேன் 015
A R ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கிய தருணம், வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கத்தில் இமாம், இசைப்புயலை சாடு சாடு எனச் சாடி அவருக்கு ஃபத்வா கொடுக்காத குறையாக கண்டனம் தெரிவ்வித்து விட்டு குத்பாவை முடித்துக் கொண்டார்.

அன்று மாலை என் உறவினர் வீட்டில் மவ்லீது ஓதினார்கள் ( மவ்லீது பிடிக்காது இருந்தாலும் உறவினர் கோபித்துக் கொள்ளக் கூடாதென்பதற்காக போயிருந்தேன்) எந்த இமாம் இசைப்புயலை சாடினாரோ அவர் நன்றாக குரலெடுத்து பாடினார்.

அவர் நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து பாடியது A R ரஹ்மானின் மெட்டில்

- சடையன் சாபு
Source :  http://anbudanislam

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails