Tuesday, August 21, 2012

இயேசு ஒரு முஸ்லிம்! (ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!)

இயேசு ஒரு முஸ்லிம்! (ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!)
இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!
(ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!)

உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக்
கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப்
பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத வகாரத்துறைப் பேராசிரியர்
ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம்என்பதைத் திட்டவட்டமாகத்
தெரிவித்துள்ளார். Was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர்
இதனைத் தெளிவுபடுத்துகிறார். இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர்
நூலைத் துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான
பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.

மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்த வகுப்பில் ஒரு மாணவி
எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர
மதங்களைக் குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளார். “இஸ்லாம் மார்க்கத்துடன்
தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர்
சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராயத்
தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.


ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியதாவது:

‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும்
மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது.
இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக
அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது
நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு
முஸ்லிம் என நான் முடிவுசெய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார
பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.

வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன்
பின்னர் அவர் தனது உண்மையைத் தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ்
சேனல் கூறுகிறது. ஏசு முஸ்லிமா? இல்லையா? என்பதை ஆராய நீண்ட ஆய்வு
இவருக்கு தேவைப்பட்டுள்ளது. ஆனால் பைபிளில் உள்ள சில வசனங்களை கீழே
தருகின்றோம். அவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்துப்பார்த்தாலே இயேசு ஒரு
முஸ்லிம்தான்; அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை இரண்டாவது
கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக விளங்கிக் கொள்வீர்கள்.

இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது; இயேசு கர்த்தர் அனுப்பிய தூதர்தான

நான் சுயமாய்ப் பேசவில்லை, நான்
பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை
அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். [ யோவான் 12:49 ]

இயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :

20. அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்
பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு
அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது
வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.
22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று
உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள்
குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார்.
அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான்
பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்;ஆனாலும், என் வலது
பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால்
எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல்,
மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
[மத்தேயு 20 : 20 முதல் 23 வரை]

தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :

அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை
அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு
அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன்
ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக்
கைக்கொள் என்றார்.
[மத்தேயு 19 : 16, 17 ]
நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையைக் கைக்கொள்ள வேண்டும்
என்று கூறிய இயேசு, அந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை எது என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :

28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம் பண்ணுகிறதைக் கேட்டு,
அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து:
கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை
எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே
கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு
ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக
என்பதே பிரதான கற்பனை.
[ மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை ]

இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:

21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே
பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே!
கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது
நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?உமது நாமத்தினாலே
பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச்
செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச்
சொல்லுவேன்.
24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள
மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல்
அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின
புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது
என்றார்.
28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல்
போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,
29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
[மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை ]

மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும் இயேசுவின் வாயிலிருந்து மொழிந்த
சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டுமே மேற்கோள்
காட்டப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் இதைவிட ஏராளமான வசனங்கள் உள்ளன. இந்த
வசனங்களைப் படித்தாலே இயேசு ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாம் சொல்லக்கூடிய
ஓரிறைக்கொள்கையைத்தான் தெள்ளத்தெளிவாக போதித்துள்ளார் என்பது
தெரிகின்றதா? இல்லையா?

இதைக் கவனத்தில் கொண்டு கீழே உள்ள திருக்குர்-ஆன் வசனத்தைப் படியுங்கள்.
இயேசுவின் மார்க்கம் இஸ்லாம்தான் என்பது இன்னும் தெளிவாகும். இதைத்தான்
நீண்டஆய்விற்குப் பிறகு அந்தப் பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். இதை
முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள். அதுதான் வித்தியாசம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்....
1.அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
2.அல்லாஹ் தேவைகளற்றவன்.
3.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4.அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்குர்-ஆன் : அத்தியாயம் : 112

====================================================
அஞ்சல் வழி தகவல் தந்த சகோதரர்
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails