Thursday, August 23, 2012

சக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந்தி

நியூயார்க் : உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகையான போர்ப்ஸ், உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் திறமை மிகுந்த செல்வாக்கு படைத்தவர்களில் சிறந்த  பெண்களை போர்ப்ஸ் பத்திரிகை வருடந்தோறும் வெளியிடுகிறது.

இதில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த சோனியா காந்தி ஆறாவது இடத்தினை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு சோனியா காந்தி ஏழாவது இடத்தில் இருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியான மிச்செல் தற்போது 7வது இடத்தினை பிடித்துள்ளார். அவரை விட சக்தி வாய்ந்த பெண்மணியாக சோனியா காந்தி திகழ்கிறார்.

இந்த பட்டியலில் முதலாவதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கேல் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஹிலாரி கிளிண்டனும், மூன்றவாது இடத்தில் பிரேசில் அதிபர் டில்மா ரௌசூப்பும் உள்ளனர். சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் முதல் மூன்று இடத்தினை இவர்களே பிடித்திருந்தனர். மெலிண்டா கேட்ஸ் நான்காம் இடத்திலும், கிறிஸ்டின் லகார்ட் ( சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர்) எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

சென்ற ஆண்டு நான்காம் இடம் வகித்த இந்திரா நூயி தற்போது 12 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டின் ஆங் சான் சூகி 19 ஆம் இடத்தில் இருக்கிறார்.
Source : http://www.inneram.com
-------------------------------------------------------------------------------------

List of top 10 World's most powerful women 2011

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails