Monday, January 30, 2012

நபித் தோழர்களின் சிறப்புகள்

3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :62

3657. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூ பக்ர் அவர்களையே) ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும்.
இதை அய்யூப்(ரஹ்) (இக்ரிமா - ரஹ் - அவர்களிடமிருந்தும், அவர்கள் இப்னு அப்பாஸ் - ரலி - அவர்களிடமிருந்தும்) அறிவித்தார்கள்.
இதே ஹதீஸ் வேறொர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அய்யூப்(ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்படுகிறது.
Volume :4 Book :62
 -------------------------------------------------------------

அபூ பக்ர் சித்தீக் (ரலி) – உண்மையாளராகிறார்.

உமர் (ரலி) – நீதிக்கு ஒரு உமர் என்று பெயர் எடுக்கிறார்.

உத்மான் (ரலி) – வெட்க உணர்வை முழுமைப் படுத்தியவர் எனப் பெயர் பெறுகிறார்.

அலீ (ரலி) – வீரத்துக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்.

வணிகத் திறமையில் அப்துர் ரஹ்மான் பின் அஃவ்ப் (ரலி) முன்னிலையில் நிற்கிறார்.

இனிய குரலுக்குச் சொந்தக் காரராக பிலால் (ரலி) – இடம் பெற்றுக் கொள்கிறார்.

பறவைகளைக் கொஞ்சி வளர்க்க நுஃகைர் (ரலி) என்ற ஒரு நபித் தோழர் முன் வருகிறார்.

உடல் வலிமையை வெளிப் படுத்திக் காட்டுவதில் சில நபித் தோழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த ஒரு பாடத்தை இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது

மேலும் படிக்க Article 5 – ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியே!

 by நீடூர் SA மன்சூர் அலி M.A., B.Ed.,

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்-குர்ஆன் 21: 107)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails