Tuesday, December 6, 2011

சர்ச்சைக்குள்ளாகும் வலைத்தளங்கள் மீது நடவடிக்கை!

சர்ச்சையை கிளப்பும் சமூக வலைத்தளங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர், கூகுள் பிளஸ் என பல்வேறுபட்ட சமூக வலைதளங்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. இதில் சர்ச்சைக்குரிய வகையில் இந்திய தலைவர்கள் மற்றும் மத வழிபாடு குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முறைகேடான பலவித கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. சில சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் இந்த சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இது குறித்து  டெல்லியில் உள்ள மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை, இணையதள சமூக வலைத் தளங்களின் இந்திய பிரதிநிதிகள் சந்தித்து பேசியபோது, இதனை அவர் தெரிவித்தார்.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails