Monday, December 12, 2011

பிரான்சில் குர்ஆனிய ஹாபிழ்கள் கௌரவிப்பு

குர்ஆன் செயற்பாட்டுக் குழு: டிசம்பர் 8ம் திகதி வியாழக்கிழமை, பிரெஞ்சு நகரான சைன்ட் டெனிசில் இடம்பெற்ற வைபவமொன்றின் போது, புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாபிழ்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய விஞ்ஞானம் மற்றும் மானுடவியலுக்கான ஐரோப்பிய நிறுவனத்தினால் இவ்வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என ஐஈஎஸ்எச் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள நிறுவனத்தின் 12 மாணவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மூன்று வருடங்களுக்குள் புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளனர்.
பிரபல குர்ஆனிய காரியும் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஷைக் அஹ்மத் இசா அல்மிஸ்ராவி மற்றும் இஸ்லாமிய விஞ்ஞானம் மற்றும் மானுடவியலுக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் தலைவர் அஹ்மத் ஜிப்லி ஆகியோர் இவ்வைபவத்தில் அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட 12 குர்ஆனிய ஹாபிழ்கள், ஐரோப்பாவிலுள்ள இஸ்லாமிய நிலையங்களில் குர்ஆன் போதனைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.


Quran Memorizers Lauded in France
Quran Memorizers Lauded in France(Ahlul Bayt News Agency) - In a ceremony held Thursday, December 8, in the French city of Saint-Denis, those who had learned the Quran by heart were honored.

 The ceremony was organized by the European Institute for Islamic Sciences and Humanities, IESH website reported.

 12 students of the institute who had managed to learn the entire Holy Quran by heart were lauded in the ceremony.

 They have memorized the Holy Book in around three years time.

 Sheikh Ahmed Isa Al-Misrawi, prominent Quran reciter and professor of Al-Azhar University, and Ahmed Jebele, head of the European Institute for Islamic Sciences and Humanities were among the participants in the ceremony.

 The 12 Quran memorizers who were honored at the event, received certificates of Quran memorization which allows them to teach Quran in Europe’s Islamic centers.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails