Friday, October 7, 2011

யெமனி உட்பட மூன்று பெண்களுக்கு சமாதானத்துக்கான நோபெல் பரிசு !


உலகளாவிய விருதுகளுள் தனிச்சிறப்புப் பெற்றது நோபல் விருது. 2011 ஆண்டுக்கான நோபெல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு சமாதானத்துக்கான நோபெல் விருது மூன்று பெண்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் லைபீரிய அதிபர் ஆல்லன் ஜான்சன் சர்லீஃப் ஒருவராவார்.
மற்ற இருவரில் ஒருவர் லைபீரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லெய்மா கொபோவி ஆவார். மூன்றாமவர் யேமன் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தவக்குல் கர்மான் ஆவார்.
பெண் உரிமை, முன்னேற்றத்திற்கு உரிய பங்களிப்புச் செய்தமைக்காக இவ்விருது உவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யேமன் நாட்டை சேர்ந்தவர் தவக்குல்கர்மான் . 32 வயதான இவர் 3 குழந்தைகளுக்கு தாயாவார்.  பல்வேறு மனிதஉரிமை போராட்டம், மற்றும் அதிபருக்கு எதிரான புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர். பெண்கள் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த பரிசு தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும். இதனை யேமன் இளைஞர்களிடமும் மக்களிடமும் அர்பணிக்கிறேன் என்றார்.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails