Monday, October 31, 2011

இந்தியாவில் 700 கோடியாவது குழந்தை "நர்கிஸ்"





லக்னோ: உலக நாடுகள் பலவும் 700 கோடியாவது குழந்தைகளை கொண்டாட்டங்களுடன் வரவேற்றுள்ளன. முன்னதாக, உலகின் மக்கள்தொகை 700 கோடியாக இன்று உயர்வதை ஐக்கிய நாடுகள் அமைப்பு அதிகாரப்பூர்மாக அறிவித்தது.

இந்தியாவில், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று காலை 7.10 மணிக்கு பிறந்த நர்கிஸ் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை, 700 கோடியாவது குழந்தை என்ற அடையாளத்தைப் பெற்றது.

உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுள்ளது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்டுள்ள செய்தி:

"மக்‍கள்தொகை மிக அதிகமாக பெருகி வருவதால் ஜனநெருக்கடி என்று சிலர் கூறலாம். ஆனால், என்னைப் பொருத்தவரையில் 700 கோடி வலிமை படைத்த மக்‍களைக்கொண்ட சமுதாயமாக நாம் உருவெடுத்துள்ளோம் என்றே கருதுகிறேன்.


பூவி வெப்பமடைதல், பொருளாதாரச் சிக்‍கல், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றுக்‍கு தீர்வு காணும் ஒரே குறிக்‍கோளுடன் உலக மக்‍கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். உலகலாவிய பிரச்னைகளுக்‍கு, உலகலாவிய தீர்வுகள் தேவைப்படுவதால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது," என்று பான் கி மூன் கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails