Tuesday, September 6, 2011

திருச்சி சையது எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, “அன்பைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பை ‘சுடர்வம்சம் தொண்டு நிறுவனம் துபாயில் வெளியிட்டது.

திருச்சி சையது
திருச்சி சையது என்ற புனைப்பெயரைக் கொண்ட எஸ்.சயது முஸ்தபா இளவயதில் திருச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து இளையநிலா, இலக்கியா, மல்லி¨, முத்துச்சிப்பி,போன்ற சிற்றிதழ்களை நடத்தியவர். பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேட்டிகள் எடுத்துள்ளார். குமுதம், குங்குமம், விகடன், பாக்யா, தேவி, போன்ற முன்னணி இதழ்களில் இவரது சிறுகதைகள் 75-க்குமேல் பிரசுரமாகியுள்ளன இலக்கிய நண்பர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘சிறுகதை நிழலில் ....’ மற்றும் ‘சிறுகதை வானில் ....’ என்ற நூல்களை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர்கள்,விஞர்கள், தலைவர்கள், தொழிலதிபர்கள், மற்றும் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான
சம்பவங்களைத் தொகுத்து இவர் தயாரித்த நூலை, “புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள்” என்ற தலைப்பில் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. தாகூரின் ‘கபீர்தாஸர் கவிதைகள்’ ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ‘சாஹித்ய அகாதெமி’ விருது பெற்ற பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ‘தமிழ் அலை
ஊடக உலகம்’ மூலம் இவரது முயற்சியில் தயாராகி வருகிறது. இலக்கிய நண்பர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து “நட்புக்கா....” என்ற நூலும்
விரைவில் வெளிவர உள்ளது. நினைவெல்லாம் நபிகள் நாயகமே!” (இறைத்தூதரின்வாழ்வில் நிகழ்வுகளும் நெகிழ்வுகளும்) என்ற நூலைத் தற்போது எழுதி வருகிறார். எம். ·பில். படிப்பிற்கா, புகழ்பெற்ற நாவலாசிரியரும் ‘தினத்தந்தி’ தலைமைச் செய்தி ஆசிரியருமான ஐ.சண்முகநாதன் அவர்களைப பற்றி “தமிழ்ச் சமுதாயத்திற்குப் பத்திரிகையாளர் சண்முகநாதனின் பங்களிப்பு -ரு ஆய்வு” என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் இவர் சமர்ப்பித்த ஆய்வுநூல் பேராசிரியர்களால் பாராட்டப்பட்டு முதல் மதிப்பெண் பெற்றது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் காசாளராக இவர்பணியாற்றியபோது அப்போதைய முதல்வர் திரு. அப்துல் சமது அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும்,¡ரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம். ·பில். பட்டமும் பெற்றவர். தற்போது பெரியார் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். பிரபல இதழ்களில் இவர் எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, “அன்பைத் தேடி ....”என்ற சிறுகதைத் தொகுப்பை ‘சுடர்வம்சம்’ தொண்டு நிறுவனம் துபாயில் வெளியிட்டது. இந்த நூலின் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது மகிழ்வான செய்தி! முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,வியரசு வைரமுத்து, பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன்,
எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர்,
வல்லிக்கண்ணன், எழில்முதல்வன், ஹிமானா சையத், ஜே.எம். சாலி, ஜின்னாஹ் ஷரீபுத்தீன், ‘நர்கிஸ்’ ஆசிரியை அனீஸ் பாத்திமா, போன்ற பிரபலங்களின் பாராட்டைப் பெற்றவர் “அன்பைத் தேடி
திருச்சி சையது எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, “அன்பைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பை ‘சுடர்வம்சம் தொண்டு நிறுவனம் துபாயில் வெளியிட்டது,

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails