Friday, July 15, 2011

தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ !

தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம்  உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி    காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!

இம்மைக்கும் மருமைக்குமாய் இறைவன் நம்மை படைத்தான் 
இரண்டிலும்  மேன்மை பெற இருகல்வி நமக்கு அளித்தான்   
இரண்டையும் இருகண்களாய்  எடுத்துக்கோ
இதுதான் நமக்கு சரி புரிஞ்சிக்கோ 

"மொவ்டிகமாய்" ( அறியாமையாய் )இருக்க மார்க்கம் சொல்லவில்லை
மார்க்கம் சொல்லாததை மதித்திட  தேவை இல்லை
மனசிலே படிக்கினும்னு நினச்சிக்கோ 
அதிலே மாபெரும் சிறப்பு இருக்கு புரிஞ்சிக்கோ    

ஒன்னுமில்லா  மாபிள்ளைக்கே  ஒரு லட்சம் கைக் கூலி
உன்னுடைய உன் "உம்மா" (அம்மா) "வாப்பா" (அத்தா- அப்பா) சொத்து பத்து  எல்லாம் காலி
இந்த நிலை மாறனும்னா உன்னுடைய நிலை உயர வேண்டும்
உலகம் உன்னைபத்தி ஒசத்தியா  பேச வேணும்
அதற்கு ஒரு வழி கல்விதான்  அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்

உன்னுடைய முன்னோர்கள் ஒரு நாள் உலகாண்டார்
உயர்வின் உச்சியிலே உலக புகழ்  சேர்த்தார்
ஏண்டி தாழ்ந்து விட்டாய் தங்கமே
எழுந்திரு  எழுச்சி பெரு செல்வமே
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதிய இன்னும் கொஞ்சம்  உயர்த்திக்கோ!

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

அல்ஹம்துலில்லாஹ்!

The Messenger of Allah (peace and blessings be upon him) said, "If good is done to someone and then they say "Jazak Allahu khayran" to the one who did the good, they have indeed praised them well." [Tirmidhi]
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக."
நம் அனைவரது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தர வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக. ஆமீன் !
உங்களது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தரும். வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக.

1 comment:

VANJOOR said...

JUST WONDERFUL.

LinkWithin

Related Posts with Thumbnails