Wednesday, July 27, 2011

நேசமிகு நண்பர் நீடூர் நாசர் !

"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" - இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. இதன் மூலம் நன்மைப் பெற்றுத் தரும் எளிய வழிமுறையை இஸ்லாம் மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது.

"கன்னி(வயது)கழிந்த பெண்ணை அவளுடைய (வெளிப்படையான) ஒப்புதல் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கக் கூடாது ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி), பதிவு : புகாரி 4741)
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்குதிருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)
மணமகனின் தந்தை ஹாஜி நாசர்(படத்தில் இடது பக்கம் கண்ணாடியுடன் நிற்பவர்) மணமகனும்
மணமகனின்  பெரிய தந்தை ஹாஜி சம்சுதீன் (படத்தில் வலது பக்கம் வெள்ளை நிற சட்டையுடன்)
நீடூரில் நடைபெற்ற நாசர் மகனாரின்  திருமணத்திற்கு சென்றிருந்தேன் எத்தனையோ திருமணங்கள் நடக்கின்றன.ஆனால் இந்த திருமணம் அனைவரையும்   மிகவும் கவர்ந்தது. மாப்பிள்ளையின் தந்தை செல்வந்தவராக  இருந்தாலும் அவரிடம் எளிமை இருந்தது. திருமணத்திற்கு வந்த அனைவரையும் புன்னகையுடன் தனித் தனியே முக மலர்ச்சியுடன் அவர் வரவேற்ற விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.
''உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும்  தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)
( எத்தனையோ  திருமணதிற்கு நாம் அழைப்புக் கொடுக்கப் பட்டு போவோம் ஆனால் அவர்கள் யாரும் நம்மை கண்டுக் கொள்ளாமல் இருப்பதனைக் கண்டு ஏன் வந்தோம் என்று நினைப்பதுமுண்டு. அவர்கள் "பெயர் சொல்லி" V.I.Pமுக்கியமானவர்களை கவணிப்பார்கள்.) 

  மணமேடையில் மாப்பிள்ளையை அமரவைத்து அண்ணல் நபிகளின் பெயரில் அழகிய மனம் கவரும் அரபு புகழ்பாடல்களான (புர்தா ஷரீப்) கோரசாக
பாடியவிதம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கவர்ந்தது. ஒவ்வொரு நொடியும் ஒராயீரம் நிகழ்வுகள். அத்தனையும் உண்மையான நிகழ்வுகள் அத்துடன் எத்தனை சித்தாத்தங்கள். மர்கஸ் கார்டன் என்ற கேரள அமைப்பினர் அண்ணல் நபிகளின் மீது கொண்டிருக்கும் நேசத்தினை அவர்கள் பாடிய பாடல்களில் வெளிப்பட்டது.
அவர்கள் நீண்ட நேரம் பாடிய புர்தா ஷரீபில் அனைவரும் மனமொன்றி அதில் ஒன்றிப்போய்  இரசித்துக் கொண்டிருந்தது கண்கொள்ளா   காட்சி.  நானும் அதில்  லயித்திருந்தேன்…



   இறுதியாக அந்த குழுவினரை சந்தித்து எனது வாழ்த்துக்களை சமர்பித்தேன் மறக்காமல் மாப்பிள்ளையின் தந்தையை சந்தித்து எனது மன நிறைவை வெளிப்படித்தினேன்… அண்ணல் நபிகள் (ஸல் அலை) அவர்களை எந்த தருணத்திலும் அதிகமதிகம் நேசிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும்…! "எங்கள் இறைவா நீ கொடுத்த அந்த அறிவினை நாங்கள்  முறையாக பயன்படுத்த நீ உதவியதற்கு, அருள் செய்தமைக்கு அணைத்துப்  புகழும் உனக்கே!"தயவு செய்து இங்கு க்ளிக் செய்யுங்கள் வீடியோ பார்க்க  

   நீடூரில் நடந்த திருமண மாப்பிள்ளையின் தந்தை நாசர் மிகவும் உயர்ந்தவர். விளம்பரம் இல்லாமல் அள்ளி ,அள்ளி கொடுக்கும் பண்பாளர். எனக்கு மிகவும் வேண்டியவர் . நான் அவரிடம் அனுப்பிய பலர் அவரால் பலன் அடைத்துள்ளனர். எலந்தங்குடி கவிஞர் ஒருவர் (மிகவும் புகழ் வாய்ந்தவர்) சென்னையில் வாழ்ந்து வந்தார். அவர் வருடத்திற்கு ஒரு முறை உதவி நாடி என்னிடம் வருவதுண்டு .என்னால் முடிந்த உதவியினை அவருக்கு செய்வேன். அவரை நாசர் அவர்களை காணும்படி ஒரு தபால் கொடுத்து அனுப்பினேன் . அவர் எதிர் பார்த்ததற்கு மேல் கொடுத்து அவரை மனம் மகிழ.வைத்தார் . அந்த கவிஞர் நீடூர் பள்ளிவாசலில் பிரசங்கம் செய்த போது நாசரை உயர்வாக சொல்லிவிட்டார். உடன் நாசர் அவர்கள் விளம்பரம் வேண்டி நான் கொடுப்பதில்லை இப்படி செய்தால் இனி என்னிடம் உதவி நாடி வராதீர்கள் என அன்புடன் சொல்லி அனுப்பினார் . ஒரு ஆண்டு கழிந்த பின் அந்த கவிஞர் வரவில்லையே ஏன் வரச் சொல்லுங்கள் ஆனால் கொடுப்பதனை மற்றவருக்கு சொல்லாமல் இருக்கச் சொலுங்கள் என்றார் . நான் சொன்னேன் அவர் இந்த பக்கம் வருவதில்லை என்று .ஆனால் பின்பு அறிந்தேன் அந்த கவிஞரை அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்.
நாசர் தர்மம் செய்வதனை விளம்பரம் செய்வதில்லை. அவர் செய்த தர்மங்கள் அளவிட முடியாது.
JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an islamic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.
Usamah bin Zaid (May Allah be pleased with them) reported: The Messenger of Allah (PBUH) said,
"He who is favoured by another and says to his benefactor: `Jazak-Allah khairan (may Allah reward you well)' indeed praised (the benefactor) satisfactorily.''[At-Tirmidhi].

ஒவ்வொரு நொடியும் ஒராயீரம் நிகழ்வுகள். அத்தனையும் உண்மையான நிகழ்வுகள் அத்துடன் எத்தனை சித்தாத்தங்கள். இறைவன் கொடுத்த அந்த அறிவைப் பயன் படுத்துபவர்கள் எதனை பேர்! "உனக்கு கொடுத்த அறிவை முறையாக பயன் படுத்தினாயா!" என்று கேட்கும் போது நீங்கள் "எங்கள் இறைவா நீ கொடுத்த அந்த அறிவினை நான் முறையாக பயன்படுத்த நீ உதவியதற்கு, அருள் செய்தமைக்கு அணைத்து புகழும் உனக்கே!" என நிறைவாக பதில் சொல்ல உங்களுக்கு அருள் கிடைத்து விட்டது. இதைவிட சிறப்பு ஏது!

2 comments:

Rajakamal said...

ஒரு முன் உதாரணமான திருமணம், அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நல்குவானகவும் இதை நமக்கு அறிய தந்த நீடுர் முகம்மது அலி அவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானக ஆமின்.

mohamedali jinnah said...

Thank you very much for your comment.
Jazak-Allah khairan
JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Islamic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness.

LinkWithin

Related Posts with Thumbnails