Friday, July 22, 2011

முஸ்லிம்கள் இறைவனை தொழுவது எவ்விதம்...!


ஒவ்வொரு மார்க்கமும்  இறைவனை வணங்கும் முறையில்  மாறுபட்டிருந்தாலும் அவர்கள் நாட்டம் படைத்தவனை தொழுவது என்பதுதான் அவர்கள் ஆழ் மனதிலுள்ள குறிக்கோள். முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல சில முஸ்லிம்களே இதனை அறியாமல் (முஸ்லிம்கள் இறைவனை தொழுவது எவ்விதம்,ஒதப் படுவதின் அர்த்தம் என்ன என்பதனை அறியாமல்)  இருக்கலாம் .

   எத்தனையோ வரலாறுகளைப் படிக்கின்றோம். ஆனால் உடன் வாழும் மற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வதில்லை. நான் லயோலா கல்லூரியில் படிக்கும் போது ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் "உங்கள் வீட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள். நீங்கள் வீட்டில் காய் கறி உண்பதுண்டா அல்லது அசைவ உணவு மட்டும்தானா" என்று.இவரின் வினா  எனக்கு மிகவும் வியப்பினைத்  தந்தது!   இது  உதாரணத்திற்கு ஒன்று ..! தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வீட்டில் வேறு மொழி பேசுகிறார்கள் என்பது சிலர் நினைப்பதுண்டு.
    முஸ்லிம்கள்  எல்லா நாட்டிலும் உள்ளனர் .அந்தந்த நாட்டில் உள்ளவர்களுக்கு அந்த நாட்டு மொழிதான் அவர்கள் தாய் மொழி . தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தமிழ்தான் அவர்கள்  தாய் மொழி . ஒரு சிலர் மற்ற மொழி அறிந்திருந்தால் அது அவர்கள் கற்றதனால் அல்லது மற்றவர்களிடம் பேசி பழகியதால் அறிந்திருக்கலாம். முஸ்லிம்கள் ஓதும் குர்ஆன் அரபி மொழியில் உள்ளதால் அதனை படித்து ஓத கற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு அதன் பொருள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அரபி பேசவும் தெரியாது. இதனைப் படித்து  அறிந்தவர்கள் வெகு சிலரே!அதன் பொருள் அறிய தற்போது கணினி அதற்கு மிகவும் உதவுகின்றது.  

உடன் வாழும் மக்களின் வாழும் முறைகளை நாம் அறிந்து வாழ்வது சிறப்பாகும்.






Al-Ikhlas (Arabic: سورة الإخلاص ) aka At-tawhid (سورة التوحيد) (Monotheism) is the 112th Sura of the Qur'an. It is a short declaration of tawhid, God's absolute unity, consisting of 4 ayat. Al-Ikhlas means "the purity" or "the refining", meaning to remain pure and faithful or a state of purging one's soul of non-Islamic beliefs, such as paganism and polytheism.

This sura establishes the Oneness of the Creator: the doctrine of Tawhid. It says that God is without equal, without origin, without end, and unlike anything else that exists. The fourth line, "Nothing is like Him", is a fundamental statement of tanzih; God as the incomparable.
A Muslim is obliged to pray at least five times a day: once before sunrise; at noon; once in the afternoon; at sunset and once at night. During prayer he or she is to focus and meditate on God by reciting these words in order to reaffirm and strengthen the bond between creator and creation. This has the effect of guiding the soul to peace and truth. Such meditation is intended to help maintain a feeling of spiritual peace, in the face of whatever challenges work, social or family life may present.

The five daily acts of peaceful prayer are to serve as a template and inspiration for conduct during the rest of the day, transforming it, ideally, into one single and sustained meditation: even sleep is to be regarded as but another phase of that sustained meditation.

"Salat is the key to Paradise"
- Prophet Muhammed (Peace Be Upon Him)

2 comments:

***வாஞ்ஜுர்*** said...

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.

VANJOOR said...

அன்பின் ஆகிரா,

என்னுடைய கருத்துகளுக்கு தாங்க‌ளாக‌வே

அக்கறையுடன்

சிரமம் பாராது

விளக்கப்படங்களையும் இணைத்து

அடியிற்கண்ட தளத்தில் எந்த பிரதியுபகாரமும் எதிர்நோக்காமல்

ப‌ல்லோர் பார்வைக்கு கிட்டிட‌ செய்யும் தங்களின் பதிவுக்கு என‌து நன்றிகள் பல்லாயிர‌ம்.

த‌ங்க‌ளின் ப‌திவு
click to read.

>>>> தொழுகை – வாஞ்சூர் <<<<<

மீண்டும் ந‌ன்றிக‌ள் ப‌ல்லாயிர‌ம்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

LinkWithin

Related Posts with Thumbnails