Wednesday, May 11, 2011

பால் வியபாரியின் மகள் இர்பானா மாநில சாதனை

தக்கலையை அடுத்துள்ள வேர்கிளம்பியை சேர்ந்தவர் மாணவி இர்பானா. இவர் மணலிக்கரை மரிய கொரட்டி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். +2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவி இர்பானா உயிரியில் பாடத்தில் 200 மார்க் எடுத்து மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1150 ஆகும்.

இவருடைய தந்தை முகம்மது நாசர். பால் வியாபாரம் செய்து வருகிறார். தாய் சுனைதாபீவி. மாநில அளவில் சாதனை படைத்த மாணவி இர்பானா தனது சாதனை குறித்து கூறியதாவது:-
 

நான் 10-ம் வகுப்பிலேயே அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிவேன் என்று நம்பிக்கையுடன் படித்தேன். அப்போதிருந்தே படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தேன். 12-ம் வகுப்பில்  வந்ததும் படிப்பதற்கு  அதிக நேரத்தை ஒதுக்கி கொண்டேன். குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். இதற்காக 11-ம் வகுப்பில் இருந்தே எனது பெற்றோர், ஆசிரியர், ஆசிரியைகள் எனக்கு ஊக்கம் அளித்தனர்.


10-ம் வகுப்பில் சாதனை படைக்க முடியாததால் மன வேதனை அடைந்தேன். இப்போது நான் எதிர்பார்த்து இருந்த மதிப்பெண் கிடைத்துள்ளது. உயிரியல் பாடத்தில்  200-க்கு 200மார்க் பெற்று மாநில அளவில் சாதனை படைத்ததற்கு அல்லாவின் கருணைதான் காரணம்.


மேலும் சாதனைக்கு துணை நின்ற ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் டாக்டருக்கு படித்து ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று இர்பானா கூறினார்.
Source : http://www.inneram.com/2011051116406/milkmans-daughter-achieved-in-plus-2

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails