Sunday, May 1, 2011

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் - ஒபாமா அறிவிப்பு -(வீடியோவுடன் )

அல்காயிதா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன், சிஐஏ உளவாளிகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கியவர் ஒசாமா பின்லேடன். கடந்த செப்டம்பர்-11, 2001 அன்றைய நியூயார்க் வர்த்தக மையம் தகர்ப்பில் மூளையாகச் செயல்பட்டவர் என்று குற்றங்சாட்டப்பட்டு சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்புக்குக் காரணமாக இருந்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதல் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவரை உயிரோடு ஒசாமாவைப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்துவதே தங்கள் தலையாய நோக்கம் என்று அவ்வப்போது அறிவிப்பது வழக்கம். இதுவரை பலமுறை கொல்லப்பட்டதாக ஊடகங்களால் அறிவிக்கப் பட்டவர்.

பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத்தில் நேற்றிரவு அமெரிக்க சிஐஏ உளவாளிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இதுகுறித்து அல்காயிதாவிடமிருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
கொல்லப்பட்ட பின் லேடனின் உடல் தங்கள் கைவசம் உள்ளதாகவும் ஒபாமா அறிவித்துள்ளார். ஒசாமா கொல்லப்பட்டதைப் பாகிஸ்தான் அரசும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 வருடங்களாக தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா உலகெங்கும் நடத்திவரும் பயங்கரவாதப் போர், ஒசாமாவின் மரணத்திற்குப் பிறகு முடிவுக்கு வருமா? அல்லது வழக்கம்போல் மேலும் ஒருமுறை ஒசாமா கொல்லப்பட்டிருக்கிறா? என்ற கேள்விகளுக்கான விடை அடுத்தடுத்த நாட்களில் தெரியும்.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails