Tuesday, November 16, 2010

காயல்பட்டணம் சரித்திரச் சுருக்கம்

By Dr.R.S.Abdul Latiff, M.A.D.Litt. 

காயல்பட்டணம் சரித்திரச் சுருக்கம்

       பண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை,பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும்.      இவ்வூர் இந்தியாவில் தமிழ்நாட்டின் தெற்கே தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் எனும் ஊருக்கு 8 கி.மீ. தெற்கிலும், தூத்துக்குடிக்கு 32 கி.மீ. தொலைவிலும் கடலோரமாக அமைந்துள்ளது. இந்நகர் தோன்றி ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது என்று இந்நகரில் கிடைக்கப்பெற்ற தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    பாண்டியர் ஆட்சி காலத்தில் மதுரை  அதன் தலைநகரமாகவும், காயல்பட்டினம் அதன் துறைமுகமாகவும் திகழ்ந்தது என்று DISCOVERY OF INDIA எனும் நூலில் பண்டித ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார்.
    இவ்வாறு பழம்பெருமை வாய்ந்த இந்நகரில் இஸ்லாம் எப்போது காலூன்றியது? ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் கி.பி. 642-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் மார்க்கமாக கேரளா வந்து சேர்ந்தது. அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டணம் வந்து குடியேறி கடற்கரையோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். தற்போது இப்பள்ளி கோசுமறை அருகே புதையுண்டுள்ளது. இதன் இமாம் செய்யிது அஹமது ஷhஹிது இப்னு முஹம்மது கரீம் மதனி ஆவார்கள். இக் குழுவினர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது.
இரண்டாவது குடியேற்றம்:
    கி.பி;. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா 'அல்வாதிக்' ஆட்சி காலத்தில் செய்யிதினா அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் எகிப்தில் முஃதஜிலா கொள்கையை ஏற்க மறுத்து ஈமானை காத்திட ஹிஜ்ரத் செய்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர்.
    காயல்பட்டணம் காட்டு மொகுதூம் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அரபுநாட்டிலிருந்து இஸ்லாத்தைப் போதிக்க காயல்பட்டணம் வந்தார்கள். இவர்களுக்கு அக்கால பாண்டிய மன்னன் அவர்களை கண்ணியப் படுத்தி நிலங்களை வழங்கியுள்ளார்.
    ஹிஜ்ரி 571 ல் ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கீழ நெய்னார் தெருவில் மறைந்து வாழும் கலீபா வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஈக்கி அப்பா கலீபா வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்தனர்.
     மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபா வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபா வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நீதிபதியாகவும் நியமித்து, ஏர்வாடி இப்ராஹிம் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.
மூன்றாவது குடியேற்றம்:
     செய்யிதினா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் தலைமையில்  பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737) ல்  காயலில் வந்து குடியேறினார். இச் சமயத்தில் எகிப்தை முகம்மதிப்னு கலாவூன் ஆட்சி செய்திருந்தார். இவர்கள் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினர். சுல்தான் ஜமாலுத்தீன் அவர்கள் பரம்பரையினர் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஜும்ஆ பெரிய பள்ளியில் சுமார் 40,000 ற்கும் மேற்பட்ட இறைநேசர்கள் அடங்கியுள்ளனர்.
  மன்னர் அரபி முஸ்லிம்கள்பால் மிகவும் அன்புடையவராக இருந்தார். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன் நாட்டின் நிர்வாகத்திலும்  பங்களித்தான். செய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.  இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனுக்கும் கிடைத்தது

.
    சுந்தர பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச் சமயத்தில் காயல்பட்டணம் அதன் தலைநகரமாக விளங்கியது.இவர் கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார்.
   இவ்வூரில் முதன்முதலாக அமைக்கப்பட்ட தெருக்கள் நான்கு: நயினார் தெரு, சதுக்கைத் தெரு(பைக்காரத் தெரு), மஹ்தூம் தெரு, மரைக்காயர் தெரு ஆகியவை. பின்னர் ஊர் விரிவாக்கத்தின் போது பல தெருக்கள் உருவாகின. ஊரை அழகாக வடிவமைத்துள்ளனர். பெண்களுக்கென்று தனிப் பாதைகள் (முடுக்குகள்) அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் கூடுமிடத்திற்கு வெட்டை என்பார்கள். எகிப்து நாட்டின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே இந்நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இன்றும் எகிப்துக்குச் சென்றால் இதே அமைப்பை பார்க்கலாம்.
    ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் திருமணத்திற்குப் பின் பெண்கள் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.
     சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜ்ரத் நாகூர் சாகுல் ஹமீது பாதுஷh நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வூர் வந்திருந்த சமயம் இம்மக்கள் மிகவும் கண்ணியப் படுத்தியதால், உவகை கொண்ட அவர்கள் இவ்வூரில் இறை நேசர்களும், குத்புமார்களும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்று துஆ செய்தார்கள். மேலும்  நாகூர் நாயகம் வந்த பிறகு காதிரிய்யா தரீகா புத்துணர்ச்சி பெற்று வளர்ந்தோங்கத் தொடங்கியது. இவர்களிடம் பைஅத்துப் பெற்றவர்களில் மிக முக்கியமானவர்கள் ஐந்து ரத்தினங்களை பெற்றெடுத்த ஹஜ்ரத் சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை சதக்கத்தி நெய்னார் அவர்களாவார்கள். இவர்களுக்குப் பின் இவர்களது மகனார் சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களது உத்திரவிற்கு இணங்க, காயல்பட்டணம் ஜும்ஆ பெரிய பள்ளியில் வைத்து ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகைரலியல்லாஹு அன்ஹு அவர்களது பேரர் ஹஜ்ரத் ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பைஅத்தும், கிலாபத்தும் கொடுத்துச் சென்றார்கள்.     ஹஜ்ரத் நாகூர் சாகுல் ஹமீது பாதுஷh நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துஆவிற்கு ஏற்ப காயல் நகரில் இறைநேசர்களும், குத்புமார்களும் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். ஹஜ்ரத் சுலைமான் வலி அவர்களின் வமிசவழியில் வந்துதித்த ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்கள் மகனார் ஹஜ்ரத் தைக்கா சாகிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் அப்துல்லாஹில் காதிரியுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் ழியாவுல் ஹக் ஸூபி ஹுஸைன் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் காதிரிய்யா தரீகாவை நமதூரில் வளர்த்த மகான்களாவார்கள்.
     இதற்கிடையில் ஹஜ்ரத் தைக்கா சாகிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திற்குப் பின் மிஸ்கீன் சாஹிபு ஆலிம் காஹிரி அவர்களால் நகரில் 'ஷாதுலிய்யா தரீகா' தோன்றியது.
      1955ம் வருடம் ஊரில் ஒரே ஜும்ஆவாக இருந்தது இரண்டு ஜும்ஆவாக பிரிந்து போனது. அதன்பின் அல்-ஜாமிவுல் அஸ்ஹர் எனும் புதிய ஜும்ஆ பள்ளி உருவாகியது. இரண்டு ஜும்ஆ உருவாக காரணமாக அமைந்தது ஊரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட போட்டிகளும், சண்டை சச்சரவுகளுமே காரணமாகும்.
      காயல்பட்டணத்தில் மூன்றாவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 1978 ஜனவரி மாதம் 13,14,15 ஆகிய தினங்களில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 11 நூல்கள் வெளியிடப்பட்டன. கருத்தரங்கம்,கவியரங்கம் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.

காயல்பட்டணத்தின் முத்திரை பதித்த ஹாபிழ்கள்!
        20 ம் நூற்றாண்டில் ஒரே நாளில் 8 மணி நேரத்தில் நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகையில் குர்-ஆன் முழுவதையும் ஓதி தொழ வைத்த ஹாபிழ்களின் பட்டியல்:
1. மர்ஹும் அல்ஹாபிழ் காரி லெ. சேகு முஹம்மது லெப்பை ஆலிம் கி.பி. 1905 ம் வருடம் இரட்டைக் குளம் பள்ளியில் தொழ வைத்தார்கள். இவர்கள் தொழவைக்கும் போது இவர்களை கட்டெறும்பு கடித்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் இவர்கள் தொழுகையை கைவிடாமல் தொழுது முடித்தார்கள். தொழுதவுடன் மயக்கமாகிவிட்டார்கள். அதன்பின் மக்கள் இவர்களை வீட்டிற்கு தூக்கிச் சென்றார்கள். இதனால் இவர்களுக்கு கட்டெறும்பு கடித்த சேகு முஹம்மது லெப்பை என்ற பெயர் வரக்காரணமாயிற்று. இவர்களின் அடக்கஸ்தலம் குத்பா பெரிய பள்ளியில் ரூமில் உள்ளது. இவர்களின் முக்கிய மாணவர்களாக திகழ்ந்தவர்கள் அல்ஹாபிழ் எம்.கே.ஓ.எம். மீராசாகிபு ஆலிம் மற்றும் சுலைமான் லெப்பை ஆலிம் ஆகியோர். கலீபா முஹம்மதலி ஆலிம் மஹ்லரி அவர்கள் இவர்களின் திருப்பேரர் ஆவார்கள்.
         ஏழு வகை கிராஅத்தை முறைப்படி தொழ வைத்த பெருமை காயல் நகரைச் சார்ந்த இவர்களுக்கு மட்டுமே உண்டு. மேலும் இவர்கள் ஓதுதலை பறவைகளும், விலங்கினங்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அக் காலத்தில் சிங்கப்பூர் சென்று தொழ வைத்த காயலர் இவர்கள் மட்டுமே! இன்றுவரை ஏழு வகை கிராஅத் ஓதி தொழ வைக்கக் கூடிய காயலர்கள் இவர்களுக்குப் பின் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின்தந்தை குத்பா பெரியபள்ளியில் உள்ளே அமைந்திருக்கும் அறையில் அடங்கப்பட்டுள்ளார்கள். பெரியபள்ளியை விரிவாக்கம் செய்யும்போது இந்த கப்ரு ஷரீஃபை உடைக்க முற்பட்டபோது விபரீதங்கள் நடைபெற்று, அதன்பின் அதை அப்படியே விட்டுவிட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
2. மர்ஹும் அல்ஹாபிழ்  M.K.O.M. மீராசாகிபு ஆலிம் அஹ்மது நெய்னார் பள்ளியில் கி.பி. 1923 லும், இலங்கை கொழும்பு சம்மான் கோட் பள்ளியில் 1930லும் தொழ வைத்துள்ளார்கள்.
3. மர்ஹும் அல்ஹாஜ், அல்ஹாபிழ் வெள்ளை தம்பி லெப்பை ஆலிம் என்ற நூகு தம்பி லெப்பை ஆலிம் அவர்கள் சிலோனில் தொழ வைத்துள்ளார்கள். இவர்கள் மர்ஹும் அப்துல் ஹை ஆலிம் அவர்களின் தந்தை.
4. அல்ஹாபிழ் அபுபக்கர் சித்தீக் ஆலிம் அவர்கள் சென்னையில் 1910 ல் தொழ வைத்துள்ளார்கள். இவர்கள் ஏ.எஸ்.ஜமால் ஹாஜி அவர்களின் தந்தை.
5. அல்ஹாபிழ் முஹ்யித்தீன் தம்பி ஆலிம் அவர்கள்- மஹ்லறா முன்னாள் முதல்வர்.
6. அல்ஹாபிழ் பாளையம் அப்துற் றஹீம் ஆலிம் அவர்கள்- 1923ல் கொழும்பு சம்மான் கோட் பள்ளியிலும், 1933ல் புதுப்பள்ளியிலும் தொழ வைத்துள்ளார்கள்.
7. அல்ஹாபிழ் முஹம்மது அபுபக்கர் அஜ்வாஜ் ஆலிம் அவர்கள்- 1950 ல் கொழும்பு சம்மான் கோட் பள்ளியிலும், மருதானைப் பள்ளியிலும் தொழ வைத்துள்ளார்கள்.
8. அல்ஹாஜ் அல்ஹாபிழ் சேகு அப்துல்காதிர் மிஸ்பாஹி ஆலிம் அவர்கள் 1976ல் கொழும்பு சம்மான்கோட்பள்ளியில் தொழ வைத்துள்ளார்கள்.
காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் உருவான வரலாறு:
     27-01-1886 ல் பஞ்சாயத்து ரூல்-'கிராம நிர்வாகச் சட்டம்'  சென்னை கவர்னரால் (G.O.MS.No. 122 L.F.) அறிமுகப்படுத்தப்பட்டது. அவ் வருடமே காயல்பட்டணம் பஞ்சாயத்து போர்டு உருவாக்கப்பட்டு திருநெல்வேலி கலெக்டரால் காயல்பட்டணம் கஸ்டம்ஸ் ஆபிஸர் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஆங்கிலேயர். 1895 ல் திரு.பொன்னையா நாடார் அவர்கள் பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் 1913 வரை தலைவராக நீடித்தார். 1908 ல் காயல்பட்டணம் கிராமம் சர்வே செய்யப்பட்டது.
1911 ல் லோக்கல் பண்ட் டிஸ்பன்ஸரி உருவாக்கப்பட்டது. தங்கள் பெண் குழந்தைகளுக்கு தாயார் அவர்கள் பஞ்சாயத்து அலுவலகம் மூலம் பெயரை மாற்றிக் கொடுக்கும் சிறப்பு நடைமுறை அமலுக்கு வந்தது. அது இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது.
1914-1918 வரை ஜனாப்.முஹம்மது தம்பி அவர்கள் ஒரு மனதாக பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1916 ல் திருநெல்வேலி கலெக்டரை ஊருக்கு அழைத்து வந்து நகரின் குடிரீர்த் தேவைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். இது இவரது மகனார் M.K.T. முஹம்மது அபுபக்கர் அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவராக இருக்கும்போது நிறைவேற்றப்பட்டது.
1919 ல் குளம் சேக்னா லெப்பை அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். 1920 ல் கிராம ரோடு சர்வே செய்யப்பட்டது. பீல்டு மேப்பும் வரையப்பட்டது. 1920ல் காயல்பட்டணம் உப்பு சர்கிள் தூத்துக்குடி உப்பு சர்கிளாக அரசால் மாற்றப்பட்டது.
திருநெல்வேலி-திருச்செந்தூர் வரை காயல்பட்டணம் வழியாக ரயில்வே தடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. காயல்பட்டணத்தின் ஒரிஜினல் ஸ்டேசன் என்பது தற்போதைய ஆறுமுகநேரி ஸ்டேசன்தான். 1924ல் தற்போதைய காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேசன் உருவாக்கப்பட்டு பழைய ரயில்வே ஸ்டேசன் ஆறுமுகநேரி ரெயில்வே ஸ்டேசனாக மாற்றப்பட்டது.
1925-29 தோல்சாப் முஹம்மது உவைஸ்னா லெப்பை நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். 1929ல் காயல்பட்டணம் பிரிக்கப்பட்டு ஆறுமுகநேரி பஞ்சாயத்து (02-11-1929) உருவாக்கப்பட்டது.
1930-34 ஹாஜி முஹம்மது ஹஸன் மரைக்கார் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1934-36 A.P. செய்யிது முஹம்மது புஹாரி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1936-47 தோல்சாப் செய்யிது இப்றாஹிம் லெப்பைஅவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1947-53 கத்தீபு S.E.செய்யிது இப்றாஹிம் ஹாஜி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். 1952 ல் பஞ்சாயத்து போர்டு மேஜர் பஞ்சாயத்தாக உயர்ந்தது.
1953-65 ஹாஜி M.K.T. அபுபக்கர் ஹாஜி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். உதவி தலைவராக கதீபு முஹம்மது அபுபக்கர் உதவி தலைவரானார்கள். 1955 எலக்ட்ரிக் ஊருக்கு வந்தது. ரோடுகளில் லைட் போடப்பட்டது.1956 காயல்பட்டணம் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.
1965-70 பாவலர் S.S. அப்துல் காதர் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். ஹாஜி L.S. இப்றாஹிம் உதவி தலைவரானார்கள். இந்த காலத்தில்தான் சப்-ரிஜிஸ்டர் ஆபிஸ் உருவாக்கப்பட்டது.
1970-73 ஹாஜி L.K.லெப்பைத் தம்பி அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1973-79 V.M.S. அனுசுத்தீன் அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள்.
1979-86 வரை நிர்வாக அதிகாரி அவர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது.
1982ல் தேர்வு நிலை பேரூராட்சியாக உயர்த்தப்பட்டது.
1986 ஹாஜி V.M.S.லெப்பை அவர்கள் நகர பஞ்சாயத்து தலைவரானார்கள். எம்.என். சொளுக்கு அப்துல் காதர் அவர்கள் உதவி தலைவரானார்கள்.
1967 ல் தோல்சாப்பு T.M.E. அஹ்மது முஹ்யித்தீன் மற்றும் குடும்பத்தார்கள் மற்றும் C.M.K. முஹம்மது நூகு ஆகியோர் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட நிலம் தானமாக வழங்கினார்கள்.
1951ல் M.T. செய்யிது இப்றாஹிம் குடும்பத்தார் மற்றும் புளியங்கொட்டை செய்யிது முஹம்மது அவர்கள் தற்போதைய புதிய பஸ் ஸ்டாண்ட் இருக்கும் இடத்தை பஞ்சாயத்திற்கு கொடுத்தார்கள். இங்கு பாவலர் பூங்கா இருந்தது. கால்நடை மருத்துவமனையும் இங்குதான் செயல்பட்டது.
1992-1995 நிர்வாக அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டது.
1996 ல் K.M.E.நாச்சி தம்பி அவர்கள் பஞ்சாயத்து தலைவரானார்கள். S.செய்யிது அஹ்மது அவர்கள் உதவி தலைவரானார்கள்.
2001 ல் திருமதி வஹீதா அவர்கள் பஞ்சாயத்து தலைவரானார்கள்.
     தற்போது  மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு (2010) அதன் தலைவராக ஹாஜி வாவு செய்யிது அப்துற் றஹ்மான் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்கள்
வரிசை எண்  பள்ளிகளின் பெயர்  தெரு பெயர்
1 குத்பா பெரிய பள்ளி  நெய்னார்தெரு.
2 குத்பா சிறு பள்ளி  நெய்னார்தெரு.
3 குருவித்துறைபள்ளி  C.கஸ்டம்ஸ் ரோடு
4 கடைப்பள்ளி  C.கஸ்டம்ஸ் ரோடு
5 மரைக்கார்பள்ளி (மஜ்ஜிது ஆமர்)  மரைக்கார் பள்ளி தெரு
6 குட்டியார்பள்ளி  அலியார் தெரு
7 அப்பா பள்ளி  அப்பா பள்ளி தெரு
8 தாயிம்பள்ளி  K.T.M. தெரு
9 ஹாபிழ் அமீர் பள்ளி  பெரியநெசவுதெரு
10 மேலப்பள்ளி  மேலப்பள்ளிதெரு
11 புதுப்பள்ளி  தைக்கா தெரு
12 செய்குஹுஸைன் பள்ளி  C.கஸ்டம்ஸ்ரோடு
13 முஹ்யித்தீன் பள்ளி  குத்துக்கல் தெரு
14 அரூஸிய்யா தைக்கா பள்ளி  காட்டு தைக்கா தெரு
15 மொகுதூம் பள்ளி  மொகுதூம் தெரு
16 ஹாஜியப்பா தைக்கா பள்ளி  மெயின் ரோடு
17 ஆறாம் பள்ளி  மெயின் ரோடு
18 காதிரிய்யாகொடிமரசிறுநெய்னார் பள்ளி  ஆறாம் பள்ளி தெரு
19 அஹ்மது நெய்னார் பள்ளி  சதுக்கைதெரு
20 இரட்டைக்குளத்துபள்ளி(மஸ்ஜிது மீகாயில்)  சதுக்கைதெரு
21 மொட்டையார் பள்ளி  கோமான்தெரு
22 கற்புடையார் பள்ளி  கீழநெய்னார்தெரு
23 மஸ்ஜிதுர்  ரஹ்மான்  சிவன் கோயில் தெரு
24 பிலால் பள்ளி  நெய்னா தெரு
25 K.M.T. பள்ளிவாசல்  K.M.T.ஹாஸ்பிடல்
26 கடற்கரை பள்ளி  சிங்கிதுறை

காயல்பட்டினத்திலுள்ள பெண்கள் தைக்காக்கள்
வரிசை எண்   தைக்கா பெயர்கள்    அமைந்திருக்கும் தெரு பெயர்
1  ஷாஹிதிய்யா பெண்கள் தைக்கா   கோமான் மேலத் தெரு.
2  செண்டு ஆலிம் பெண்கள் தைக்கா   குத்துக்கல் தெரு.
3  ஜன்னத்துல் காதிரிய்யா தைக்கா   சதுக்கை தெரு.
4  முஹிய்யித்தீன் ஆண்டவர்கள் பெண்கள் தைக்கா   சீதக்காதி நகர்.
5  கதீஜா நாயகி பெண்கள்தைக்கா   நெய்னார் தெரு.
6  பாத்திமா நாயகி பெண்கள் தைக்கா   நெய்னார் தெரு.
7  ஹலிமா பள்ளி   சதுக்கை தெரு.
8  வாவு தைக்கா   ஆறாம் பள்ளி தெரு.
9  மஹ்பூபு சுபுஹானி பெண்கள் தைக்கா   சதுக்கை தெரு.
10  இப்னு ஹஜர் பெண்கள்தைக்கா   கி.மு.கச்சேரி தெரு.
11  சின்னக்கல் மௌலானாதைக்கா   சொளுக்கார் தெரு.
12  பெரியகல் தைக்கா   சொளுக்கார் தெரு.
13  முஃபதுல் முஃபினாத்து தைக்கா   குத்துக்கல் தெரு.
14  சதக்கத்துல்லா அப்பா தைக்கா   சதுக்கை தெரு.
15  ரஹ்மத் தைக்கா   சதுக்கை தெரு.
16  நஹ்வி அப்பா தைக்கா   சொளுக்கார் தெரு.
17  ஹைரிய்யா பெண்கள் தைக்கா   நெய்னார் தெரு.
18  அல் – அமான் தைக்கா   நெய்னார் தெரு.

19  பரக்கத் தைக்கா
 நெய்னார் தெரு.
20  கிழ்ரு தைக்கா   மரைக்கார் பள்ளி தெரு.
21  ஜன்னத்துல் பிர்தௌஸ் தைக்கா
 குத்துக்கல் தெரு.
22  அ.க. பெண்கள் தைக்கா   சொளுக்கார் தெரு.
23  ஹாபிழ் அமீர் பெண்கள் தைக்கா
 சின்ன நெசவு தெரு.
24  மாஅபதுன் நிஸ்வான் தைக்கா   புதுக்கடை தெரு.
25  முன்ஸக்கதுன் நிஸ்வான் தைக்கா   தைக்கா தெரு.
26  ஜர்ரூக்குல் ஃபாஸி பெண்கள் தைக்கா   சித்தன் தெரு.
27  அரூஸுல் ஜன்னாஹ் பெண்கள் தைக்கா
 தீவுத் தெரு.
28  ஹலிமா தைக்கா   நெய்னார் தெரு.
காயல்பட்டினத்திலுள்ள பொது நல அமைப்புகள், மன்ஸில்கள், திக்ரு மஜ்லிஸுகள், விளையாட்டு மைதானங்கள்மற்றும் மத்ரஸாக்கள்.
 வரிசை எண்    நிறுவனங்கள்  தெரு பெயர்
1  மஹ்லறதுத்துல்காதிரியா சபை   அம்பலமரைக்கார் தெரு
2  மன்பவுல் பறகாத்சங்கம்   நெய்னார் தெரு
3  காயிதேமில்லத்இளைஞர் சமூக அமைப்பு   நெய்னார் தெரு
4  அல் -அமீன் இளைஞர் நற்பணி மன்றம்   சதுக்கை தெரு
5  ஜலாலியா சங்கம்   சதுக்கை தெரு
6  காழிஅலாவுத்தீன் அப்பா தைக்கா    சதுக்கை தெரு
7  மஹ்பூபு சுபுஹானி சங்கம்   ஆறாம் பள்ளி தெரு
8  மழ்ஹருல் பாயிஸீன் சங்கம்   மொகுதூம் தெரு
9  மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை   புதுப்பள்ளி தெரு
10  மஜ்லிஸுல் கறம் சங்கம்   குத்துக்கல் தெரு
11  இளைஞர் ஐக்கிய முண்ணனி   சி.கஸ்டம்ஸ் ரோடு
12  மஜ்லிஸுல் புகாரி ஷரிபு சபை   பெரியமுத்துவாப்பா தைக்காதெரு
13  ஹாமிதிய்யா சன்மார்க்க சபை   பெரியமுத்துவாப்பா தைக்காதெரு
14  ழியாவுல் காதிரியா தைக்கா   K.T.M.தெரு
15  கௌதியா சங்கம்   காட்டு தைக்கா தெரு
16  ரிஜ்வான் சங்கம்    பைபாஸ் ரோடு
17  ரெட் ஸ்டார் சங்கம்   அப்பா பள்ளி தெரு
18  பெரிய சதுக்கை   சதுக்கை தெரு
19 ஸூபி மன்ஜில்   குத்துக்கல் தெரு
20  குத்பிய்யா மன்ஜில்   புதுக்கடை தெரு
21  ஐக்கிய விளையாட்டு சங்கம் (U.S.C.)   மெயின்ரோடு
22  காயல் விளையாட்டு சங்கம் (K.S.C.)   நெய்னா தெரு
23  கௌது முஹ்யித்தீன் பெண்கள் மத்ரஸா   அலியார் தெரு
24  முஅஸ்கர் ரஹ்மான் பெண்கள் அரபிக்கல்லூரி    சொளுக்கார் தெரு
25  நசூஹா பெண்கள் ஹிப்ழு மத்ரஸா   சதுக்கை தெரு
26  முஅஸ்கர் ரஹ்மான் பெண்கள் ஹிப்ழு மத்ரஸா   நெய்னார் தெரு
27  சாகிபு அப்பா தைக்கா   தைக்கா தெரு
28  மஜ்லிஸுன்னிஸ்வான் மத்ரஸா   தைக்கா தெரு
29  ஜாவியத்து பாஸியத்துஷ் ஷாதுலிய்யா மத்ரஸா   கி.மு கச்சேரி தெரு
30  ஆரூஸுல் ஜன்னாஹ் பெண்கள் மத்ரஸா
 தீவுத்தெரு
பள்ளிக் கூடம், பொது நிறுவனங்கள்
 வரிசை எண்    பள்ளிக்கூடம், பொதுநிறுவனங்கள்     தெருபெயர்
1  பொது நூல்நிலையம்   புதிய பஸ் ஸ்டாண்டு.
2  ஆரம்ப சுகாதார நிலையம்   புதிய பஸ் ஸ்டாண்டு.
3  கிராமச் சாவடி   பைபாஸ்ரோடு.
4  3ம்நிலை நகராட்சி அலுவலகம்   பஞ்சாயத்து ரோடு.
5  அரசு மருத்துவமனை   மருத்துவர் தெரு.
6  சார்பதிவாளர் அலுவலகம்
 புதிய பஸ் ஸ்டாண்டு.
7  இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்   பெரிய நெசவு தெரு.
8  சென்ட்ரல் பேங்க்  L.K. லெப்பை தம்பி சாலை.
9 I.C.I.C.I. பேங்க்,
மெயின் ரோடு.
10  மீன் மார்க்கட்   பரிமார் தெரு.
11  தபால் நிலையம்   மெயின் ரோடு.
12  B.S.N.L.தொலைதொடர்பு நிலையம்
 ரத்தினபுரி.
13  சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி .
 சதுக்கை தெரு
14  சென்ட்ரல் மெட்ரிகுலேசன் பள்ளி
 சதுக்கை தெரு.
15  எல்.கே.மேல்நிலைப் பள்ளி   எல்.கே.லெப்பை தம்பி சாலை.
16  எல்.கே.மெட்ரிகுலேசன் பள்ளி   எல்.கே.லெப்பை தம்பி சாலை.
17  அல்-அமீன் ஆங்கிலப் பள்ளி   அலியார் தெரு.
18  முஹ்யித்தீன் மெட்ரிகுலேசன் பள்ளி
 நெய்னார் தெரு.
19  சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
 சதுக்கை தெரு.
20  அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி    தீவுத் தெரு.
21  எல்.கே. துவக்கப்பள்ளி   தீவுத் தெரு.
22  புகை வண்டி நிலையம்   திருச்செந்தூர் ரோடு
23  புதிய பேருந்து நிலையம்   திருச்செந்தூர் ரோடு
24  தாரங்கதாரா கெமிக்கல்ஸ்   தூத்துக்குடி ரோடு
25  தைக்கா ஸ்கூல்   தைக்கா தெரு
26  வாவு வஜிஹா பெண்கள் கல்லூரி    திருச்செந்தூர் ரோடு
27 K.M.T.மருத்துவமனை   திருச்செந்தூர் ரோடு
28  ரசாக் மருத்துவமனை   ரத்தினாபுரி
29  துளிர் மனநிலை குன்றியோர் பள்ளி   ரத்தினாபுரி
30  கூட்டுறவு வங்கி   L.K.லெப்பை தம்பி சாலை
31  வெஸ்ட்ரன் யூனியன் மணி ட்ரான்ஸ்ஃபர்  போஸ்ட் ஆபிஸ், மெயின் ரோடு.
Source : http://sufimanzil.org/tag/zaviya

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails