Tuesday, November 30, 2010

"இன்ஷா அல்லாஹ்" (இறைவன் "அல்லாஹ்" நாடினால்" )

"இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்" என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கள் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக் இன்னும், "என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்" என்றும் கூறுவீராக!18:24அல்-குர்ஆன் சூரத் அல் -கஹ்ப்

அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு(இன்ஷா அல்லாஹ் ) செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார்.68:28அல்-குர்ஆன்

ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்துணை சிறியதாயினும், பெரிய தாயினும், அதனை அளிக்கு முன் ” இன்ஷா அல்லாஹ்” என்று கூறின், அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கடமைப் பட்டவராகிறார். மேலும் அல்லாஹ், அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றப் போது மானவன்.

எனவே ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி வழங்குமுன் “இன்ஷா அல்லாஹ்” எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.

உலகில் அனைத்துச் செயலகளும்,இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன.மனித வாழ்வின் அனைத்துப் போக்கு களும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும்

இந்த உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதே ” இன்ஷா அல்லாஹ்”
நம்பிக்கையை மட்டும் இழக்காதே. ஏனெனில் உன் அருகாமையில் அல்லாஹ் இருக்கின்றான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails