Saturday, November 13, 2010

"ஹஜ்”என்னும் அரும்பாக்யம்

கனவினை மெய்பிப்பதாக விழைந்து
 மனதுக்கு பிடித்த மகனை விரைந்து
அறுத்திடத் துணிந்த போழ்து
பொறுத்திட்டார் புதல்வர் மகிழ்ந்து...
மனிதப் பலியினை மறுத்து;
புனித சுவனத்து ஆட்டினை அறுத்து
பகரமாக்கியது படைத்தோனின் நியாயம்
அகத்தின் அழுக்காறு களைவதே தியாகம்;
இறைச்சியும்; இரத்தமும்
இறைவனைச் சேரா!

தந்தையும் மகனுமாய் உழைத்து;
சிந்தையைக் காந்தம்போல் கவரும்
முதலாலயம் அமைத்து;
பாரோரெல்லாம் பயணித்திட அழைத்தனரே...
யாரெல்லாம் பாக்யம் பெற்றனரோ-
அவர்களெல்லாரும்

இச்சையை துறந்து;
இம்மையை மறந்து;
ஹஜ்ஜை நாடி;
 இறையன்பைத் தேடி;
இன்பமாய் தல்பியா பாடி;
துன்பம் போக்க துஆ செய்வர்
கோடானு கோடி....
பாக்யம் பெற்றவர்களாய் நம்மனைவரையும்
ஆக்கியருள வேண்டும்- ஆற்றல் மிகு படைத்தோன்.

"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
Source : http://kalaamkathir.blogspot.com/

ஹாஜி E.M. நாகூர் ஹனிபாவின்-எல்லோரும் ஹஜ் செய்யலாம்...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails